புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு எல்லை அம்மன் நகரைச் சேர்ந்தவர் லட்சுமி. 43 வயதான இவர் கணவரை இழந்து 2 மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சாமியார் போல் உடை அணிந்திருந்த 2 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள், லட்சுமிக்கு காலில் அடிபட்டதைக் கூறி, உனக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர் என்றும் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால் வீட்டில் உள்ள தங்க நகைகளை மந்திரித்தால் எல்லாம் சரியாகி விடும் என்றும் கட்டுக்கதை கிளப்பி விட்டுள்ளனர். இதை நம்பிய லட்சுமி, தனது கையில் போட்டிருந்த 2 பவுன் வளையல்கள், காதில் அணிந்திருந்த தங்க தோடு ஆகியவற்றை அவர்களிடம் கழற்றி கொடுத்திருக்கிறார்.
அதன்பின் மூலிகை கலந்த தேங்காய் எண்ணெயை கொடுத்து ரூ.20 ஆயிரத்தை அவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் லட்சுமி தன்னிடம் ரூ.8,500 மட்டுமே இருப்பதாகக் கூறி அந்த ஆசாமிகளிடம் கொடுத்துள்ளார். இதையெல்லாம் வாங்கிக் கொண்ட அந்த ஆசாமிகள் மந்திரம் சொல்வது போல் நடித்து ஒரு செம்பை கொடுத்து அதில் நகைகள் இருக்கின்றன. நாளை அதை திறந்து நகைகளை எடுத்துக் கொள்ளுமாறு கூறி விட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றனர். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த மகன் விக்னேசிடம், நடந்த விவரம் குறித்து லட்சுமி தெரிவித்துள்ளார்.
உடனே அவர் செம்பை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் எதுவும் இல்லை. இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்கு வந்த மர்ம ஆசாமிகள் சாமியார் போல் நடித்து நகை, பணத்தை பறித்துச்சென்றது தெரியவந்துள்ளது.இது குறித்து மங்கலம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
மேலும் படிக்க | பீப் பிரியாணிக்கு தடை ஏன்? பட்டியலின ஆணையத்திடம் சிக்கிய மாவட்ட ஆட்சியர்!
மோட்டார் சைக்கிளில் 2 பேர் காவி வேட்டி அணிந்து லட்சுமி வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து வில்லியனூர் பகுதியில் காவி வேட்டியுடன் நடமாடிய 8 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்ததில் ஒருவர் சிக்கியுள்ளார். அவரது கூட்டாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க | விறகு வெட்டி பிழைப்பவரிடம் மிரட்டி பணத்தை பிடுங்கும் போலீஸ்! வைரலான வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR