சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை அகற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை அகற்றக் கோரி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 26, 2022, 02:35 PM IST
  • சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் இடையூறு
  • சட்டவிரோத ரிசார்ட்களை அகற்றக் கோரிய வழக்கு
  • தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை அகற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி title=

சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமுள்ள 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பைப் புலிகள் சரணாலயமாக 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நான்காவது புலிகள் சரணாலயமான சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோத ரிசார்ட்கள் செயல்படுவதாக கூறி அவற்றை அகற்ற உத்தரவிடக் கோரி விலங்குகள் நல ஆர்வலரும் வழக்கறிஞருமான சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம்

அந்த மனுவில் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 51 ரிசார்ட்கள் உள்ளதாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பிய விண்ணப்பத்துக்கு சத்தியமங்கலம் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும்  கள இயக்குனர் பதிலளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வன விலங்குகள் வாரியத்திடமோ மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடமோ ஒப்புதல் பெறாமல் இந்த ரிசார்ட்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம்

மேலும் படிக்க | நெல்லை ஆட்டோ ஓட்டுனர் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

இந்நிலையில், வன உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ரிசார்ட்களை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் வனத்துறை அதிகாரிகள் உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார். எனவே, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் அனைத்து ரிசார்ட்களையும் சீல் வைக்க கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு ரிசார்ட்களை எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கவில்லை எனவும் ரிசார்ட்களை சேர்க்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் படிக்க | இரு நாட்களாக இறந்து கிடந்த தாய் யானையும் குட்டியும்! என்ன நடந்தது?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News