நெல்லை ஆட்டோ ஓட்டுனர் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட் பகுதியில் கோவில் நில தகராறில் ஆட்டோ ஓட்டுனர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 26, 2022, 01:51 PM IST
  • கோவில் நில தகராறில் அரங்கேறிய கொடூரம்
  • ஆட்டோ ஓட்டுநர் துடிதுடிக்க வெட்டி கொலை
  • சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Trending Photos

 நெல்லை ஆட்டோ ஓட்டுனர் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் title=

நெல்லை மாவட்டம் டவுன் நயினார்குளம் மார்க்கெட் பகுதியில் காய்கறிகள் இறங்கிக் கொண்டிருந்தபோது நெல்லை சுப்பையாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் உத்தரவின்பேரில் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது நெல்லை மாவட்டம் சுப்பையாபுரம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் சுற்றியுள்ள இடம் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வந்தது தெரியவந்தது.

Nellai auto driver murder

அதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் சசிகுமாரைத் திட்டமிட்டு கொலை செய்தது உறுதியானது. கொலை தொடர்பாக கொலைக்குக் காரணமான சுப்பையாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் நெல்லை மாநகர காவல்துறை நில அபகரிப்பு பிரிவில் பணி செய்யும் உதவி ஆய்வாளர் அழகு பாண்டியன் அவரது மனைவி ராஜம்மாள் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | இரு நாட்களாக இறந்து கிடந்த தாய் யானையும் குட்டியும்! என்ன நடந்தது?

Nellai auto driver murder

இதனையடுத்து கொலையில் முக்கிய குற்றவாளியான நில அபகரிப்பு பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அழகு பாண்டியனை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். தொடர்ந்து சசிகுமாரின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | பாலியல் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News