அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்எல்ஏ-க்கள் ஆலோசனை கூட்டம்

Last Updated : May 16, 2017, 10:32 AM IST
அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்எல்ஏ-க்கள் ஆலோசனை கூட்டம் title=

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

நேற்று மாலை தி.மு.க. தலைமை அலுவலகத்திலிருந்து, உடனடியாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று சென்னை வர வேண்டும். ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் மு.க ஸ்டாலின், திமுக எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்க படுகிறது.

ஏற்கனவே, சட்டமன்ற கூட்டத்தை உடனே கூட்ட முதல்- அமைச்சர், சபாநாயகர் ஆகியோரை வலியுறுத்த வேண்டும் என்று கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் திமுக எம்எல்ஏ-க்களின் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் தெரிகிறது.

Trending News