வீட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை! உறுமல் சத்தம் கேட்டு உயிர் தப்பிய தொழிலாளி..

Leopard Latest News : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை சேமுண்டி பகுதியில் வீட்டில் பதுங்கிய சிறுத்தை.   

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : May 25, 2024, 07:05 PM IST
  • வீட்டில் இருந்த சிறுத்தை
  • கதவை திறந்த தொழிலாளிக்கு ஷாக்!
  • உறுமல் சத்தத்தால் உயிர் தப்பினார்
வீட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை! உறுமல் சத்தம் கேட்டு உயிர் தப்பிய தொழிலாளி.. title=

Leopard Latest News : ஸ்ரீ மதுரை சேமுண்டி பகுதியில் இன்று வழக்கம்போல் தோட்டப்பணி செய்யும் தொழிலாளி உபகரணங்களை எடுக்க வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீட்டைத் திறந்தபோது பயங்கர உறுமல் சத்தம் கேட்டுள்ளது வீட்டில் எட்டி பார்த்தவர் சிறுத்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதவை சாத்தி கயிற்றால் கதவை கட்டிவிட்டு அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அந்த பகுதிக்கு வந்த வனத்துறையினர் வீட்டிற்குள் சிறுத்தை இருப்பதை உறுதி செய்து வீட்டை சுற்றி வளைத்தனர்.

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வீட்டிற்குள் பதுங்கி இருக்கும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்துள்ளனர் அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.

சிறுத்தை பதுங்கி இருக்கும் வீட்டில் விவசாய பணிகள் செய்வதற்காக பொருட்கள் வைக்கும் குடோனாக பயன்படுத்தப்பட்டிருப்பதும் அந்த வீட்டில் சிறுத்தை பதுங்கி இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | ரெமல் புயல் குறித்த வானிலை ஆய்வு மையத்தின் புதிய அப்டேட்

சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டின் அருகே இல்லாமல் தொலைதூரத்திற்கு செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சேமுண்டி பகுதியில் ஆளில்லா வீட்டில் சிறுத்தை பதுங்கி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | சூட்கேஸில் பதுக்கி வைக்கப்பட்ட கேஷ்... அலேக்காய் பிடித்த அதிகாரிகள்: விமான நிலையத்தில் பரபரப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News