Ola Electric Car அறிமுகம் ஆகவுள்ளதா? குறிப்பு கொடுத்த ஓலா சி.இ.ஓ

ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் பாவிஷ் அகர்வால் மின்சார வாகனத் துறையில் நிறுவனத்தின் வருங்கால நுழைவு பற்றிய குறிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 27, 2022, 03:05 PM IST
  • ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மின்சார கார்களின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
  • இது பற்றிய குறிப்பை வெளியிட்டார் பாவிஷ் அகர்வால்.
  • முதலீட்டாளர்களின் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்: பாவிஷ் அகர்வால்
Ola Electric Car அறிமுகம் ஆகவுள்ளதா? குறிப்பு கொடுத்த ஓலா சி.இ.ஓ title=

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மின்சார கார்களின் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் பாவிஷ் அகர்வால் இந்த துறையில் நிறுவனத்தின் வருங்கால நுழைவு பற்றிய குறிப்புகளை வெளியிட்டுள்ளார்.

மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில் ஒரு வாடிக்கையாளருக்கு பதிலளித்த அகர்வால் (Bhavish Aggarwal), "உங்கள் காரின் அடுத்த மாற்று ஓலா மின்சார காராக இருக்க வேண்டும்" என்று எழுதினார். செவ்வாயன்று அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், அகர்வால் ஒரு காரின் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

"உங்களால் ஒரு ரகசியத்தை பாதுகாக்க முடியுமா?" என்று எழுதி அந்த படத்துக்கு தலைப்பிட்டுள்ளார். இதற்கிடையில், ஓலா எலக்ட்ரிக் திங்களன்று டெக்னே பிரைவேட் வென்ச்சர்ஸ், அல்பைன் ஆப்பர்ச்சுனிட்டி ஃபண்ட், எடெல்வீஸ் மற்றும் இன்னும் சில நிறுவனங்கள் மூலம் $200 மில்லியனுக்கு மேல் திரட்டியதாக அறிவித்தது. சமீபத்திய தரவுகள் நிறுவனத்தின் மதிப்பை $5 பில்லியனாக மதிப்பிட்டுள்ளன. 

ALSO READ | Ola அதிரடி: மின்சார பைக்குகள் மற்றும் மலிவு விலை மின்சார ஸ்கூட்டர்கள் விரைவில் அறிமுகம் 

"நாங்கள் ஸ்கூட்டர் துறையை முழுதாக மாற்றியுள்ளோம். மேலும் எங்கள் புதுமையான தயாரிப்புகளை பைக்குகள் உள்ளிட்ட இரு சக்கர வாகன வகைகளுக்கும் கார்களுக்கும் கொண்டு வர எதிர்பார்த்துள்ளோம்" என்று அகர்வால் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"முதலீட்டாளர்களின் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலீட்டாளர்களுடன் சேர்ந்து, மின்சார வாகன புரட்சியை இந்தியாவிலிருந்து முழு உலகுக்கும் கொண்டு செல்ல முழு முனைப்புடன் உள்ளோம். " என்று அவர் மேலும் கூறினார். 

கடந்த 12 மாதங்களில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஃபியூச்சர் தொழிற்சாலையை உருவாக்கியுள்ளது. இங்கு இப்போது தினமும் கிட்டத்தட்ட 1,000 யூனிட் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Ola Electric Scooters) உற்பத்தி செய்கிறது. 

ALSO READ | நற்செய்தி! பெண்களால் இயக்கப்படும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக உருவெடுக்கும் OLA 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News