தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் வகையில் தமிழக அரசு ஸ்மார்ட் கார்டு முறையை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு விநியோகம் நடைபெற்று வந்தது.
அத்துடன், இன்று (மார்ச் 1-ம் தேதி) முதல் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு ஸ்மார்ட் கார்டு கட்டாயம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஸ்மார்டு கார்டு இல்லை என்றால் இன்று முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மார்ச் ஒன்றாம் தேதிக்குள் ஸ்மார்ட் கார்டு பெறாதவர்களின், பழைய ரேஷன் கார்டுகள் போலி என நீக்கப்படும் என்றும், அதன்பிறகு புதிய ஸ்மார்ட் கார்டுகளுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என பொதுவிநியோகத்துறை, அனைத்து மாவட்ட வழங்கல் துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.