முறைகேடாக சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற பெண் ஊராட்சி மன்ற தலைவரின் காசோலை முடக்கம்

பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட  ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போலியான சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற பெண் ஊராட்சி மன்ற தலைவரின்  காசோலை முடக்கம் செய்யப்பட்டது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 21, 2022, 12:22 PM IST
  • முறைகேடாக சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி
  • பெண் ஊராட்சி மன்ற தலைவரின் காசோலை முடக்கம்
  • மறு அறிவிப்போ அல்லது புதிய தலைவர் பொறுப்பேற்கும்
முறைகேடாக சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற பெண் ஊராட்சி மன்ற தலைவரின் காசோலை முடக்கம் title=

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஊராக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டமும் அடங்கும். இந்நிலையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சியில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட கல்பனா சுரேஷ் என்ற பெண் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

இம்முறை அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ள கல்பனா சுரேஷ் என்பவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் முறைகேடாக ஆதிதிராவிடர் சாதி சான்றிதழை சமர்ப்பித்து வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தோளப்பள்ளி ஊராட்சியில் அதே தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்கியராஜ் என்பவர் மாவட்ட நிர்வாகத்திற்க்கு அளித்துள்ள புகார் மனுவில் ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தங்கள் தோளப்பள்ளி ஊராட்சியில் மாற்று சமூகத்தை சேர்ந்த கல்பனா சுரேஷ் என்பவர் முறைகேடாக போலியான ஆதிதிராவிடர் சாதி சான்றிதழை கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாகவும். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வெண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 

councillor

அதைத் தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் விழிக்கண் குழு தொடர் விசாரணை நடத்தியதில் தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சுரேஷ் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்றும் முறைகேடாக சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் தெரியவந்தது.  மாவட்ட விழிக்கண் குழு நடத்திய விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரின் காசோலையை(செக் பவர்) முடக்கம் செய்து மாவட்ட ஆட்சியரும் ஊராட்சிகளின் ஆய்வாளருமான குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் 3 மணி நேரம் திடீர் மின்வெட்டு - இது தான் காரணமா?

மேலும் மறு அறிவிப்போ அல்லது புதிய தலைவர் பொறுப்பேற்கும் வரை அணைக்கட்டு கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் வசம் காசோலை (செக் பவர்) ஒப்டைப்புக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இசைஞானி நம்மை ஒன்றிணைப்பார் - மதுரையில் பாஜக அடித்த போஸ்டர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News