சென்னையின் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

Last Updated : Jan 23, 2017, 12:23 PM IST
சென்னையின் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் title=

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக சென்னையின் பல பகுதிகளில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டடுள்ளனர்.

மெரினா கடற்கரையை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மறுத்து வருவதால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். கலைந்து போகாத போராட்டக்காரர்களின் மேல் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு என போலீசார் ஈடுபட்டுள்ளதால் 

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பொதுமக்கள் போராட்டக்களத்தில் குதித்தனர்.சென்னை அண்ணா சாலை, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட நகரின் பல முக்கிய சாலைகளில் இன்று பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

Trending News