சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.
காலை 10.30 மணிக்கு சட்டசபை கூடியதும், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவலக ஆய்வு குழு கூட்டம் நடைபெற உள்ளது. நிதியமைச்சராக ஜெயக்குமார் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக சபாநாயகர் தனபால், தன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு வாக்களிக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் செங்கோட்டையன் தலைமையில் சற்று நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது #RKNagar4aiadmk
— AIADMK (@AIADMKOfficial) March 15, 2017