ஏர்டெல் பயனர்களுக்கு Disney+ Hotstar இலவசம்! அதிரடி சலுகை!

Airtel recharge plans: சில ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களுடன் ஏர்டெல் அதன் பயனர்களுக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.    

Written by - RK Spark | Last Updated : Feb 9, 2023, 06:50 AM IST
  • ரூ.399 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி, 3 மாத இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது.
  • ரூ.499 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி, 3 மாத இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது.
  • ரூ.3359 திட்டம் 356 நாட்கள் வேலிடிட்டியுடன் பல நன்மைகளை வழங்குகிறது.
ஏர்டெல் பயனர்களுக்கு Disney+ Hotstar இலவசம்! அதிரடி சலுகை! title=

இந்தியன் பிரீமியர் லீக் 2023 சீசனை நேரடி ஒளிபரப்பு செய்ய டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தயாராகி வருகிறது. இந்த ஓடிடி இயங்குதளம் தனது வாடிக்கையாளர்கள் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க அனுமதிக்கும் நோக்கில் மாதாந்திரம் முதல் வருடாந்திர செல்லுபடியாகும் வரையிலான பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளது.  ஏர்டெல் வழங்கும் இந்த திட்டங்கள் சற்று விலை உயர்ந்ததாக இருந்தாலும், ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம் இருந்தால் நீங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாகப் பெறலாம்.  சில ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களுடன் ஏர்டெல் அதன் பயனர்களுக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.  தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் ஏர்டெல் 5ஜி இயக்கப்பட்ட நகரங்களில் வசிக்கும் பயனர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் 5ஜி வேகத்துடன் டேட்டா பலன்களும் கிடைக்கப்பெறும்.  ஏர்டெல் வழங்கும் பல்வேறு திட்டங்களை பற்றி இங்கே காண்போம்.

மேலும் படிக்க | 10 ஆயிரம் ரூபாய் போனை வெறும் 550 ரூபாய்க்கு வாங்கலாம்! எப்படி? முழு விவரம்

ரூ.399 திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் 3 மாத இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவையும், அனைத்து உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 2.5 ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது.  மேலும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்ஸிற்கான அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள் சந்தா மற்றும் பல கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

ரூ.499 திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் 3 மாத இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவையும், தினசரி 3 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது.  மேலும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்ஸிற்கான இலவச சந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள் சந்தா, இலவச ஹலோ ட்யூன்ஸ் போன்ற பல கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

ரூ.719 திட்டம்: 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் 3 மாத இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவையும், எக்ஸ்ட்ரீம் ஆப், தினசரி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

ரூ.779 திட்டம்: 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் தினசரி 1.5 ஜிபி இணைய டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 3 மாத இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா போன்றவற்றை வழங்குகிறது.

ரூ.839 திட்டம்: 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த ரீசார்ஜ் திட்டம், அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 2ஜிபி டேட்டா. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத சந்தா, எக்ஸ்ட்ரீம் ஆப்ஸிற்கான அணுகல் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.

ரூ.999 திட்டம்: 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த ரீசார்ஜ் திட்டம், 2.5ஜிபி தினசரி டேட்டா ரோல்ஓவர், அன்லிமிடெட் அழைப்பு, எஸ்எம்எஸ், 3 மாத இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பிற்கான 84 நாட்கள் சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.

ரூ.3359 திட்டம்: 356 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த வருடாந்திர திட்டத்தின் கீழ் உங்களுக்கு தினசரி 2.5ஜிபி டேட்டா ரோல்ஓவர், எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்பு, இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் அமேசான் பிரைம் வீடியோ அணுகளுக்கான 1 ஆண்டு சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.

மேலும் படிக்க | OnePlus Cloud 11: வெளியானது OnePlus 11; விலை எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News