கூகுளில் தானோஸ் கையை தொட்டால் நடக்கும் மேஜிக்!

எண்ட்கேம் திரைப்படம். 

Updated: Apr 26, 2019, 02:51 PM IST
கூகுளில் தானோஸ் கையை தொட்டால் நடக்கும் மேஜிக்!

உலகம் முழுவதும் இப்போது பரபரப்பாக, பேசப்பட்டு வருவது மார்வெல் காமிக்ஸின் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படம். 

அந்த வகையில் உலகமே கொண்டாடும் அளவுக்கு ஒரு திரைப்படத்தை எடுத்து சிறப்பான வெற்றியடைந்துள்ளது மார்வெல். மார்வெல் ரசிகர்களுக்காக அவெஞ்சர்ஸ் மற்றும் தானோஸ் அனைவருக்கும் சேர்த்து ஓர் அர்ப்பணிப்பை கூகுள் செய்துள்ளது. 

கூகுள் தேடுபொறியில் தானோஸ் (Thanos) என்று ஆங்கிலத்தில் டைப் செய்யுங்கள். அதில், அனைத்துத் தகவல்களும் அவெஞ்சர்ஸ், மார்வெல், டி.சி உட்பட அனைத்து காமிக்ஸ் கதைகளைப் பற்றிய செய்திகளும் வந்துகுவியும். அதில், வலதுபுறம் சிறிதாக தானோஸ் பயன்படுத்திய காண்ட்லெட்டின் சிறிய படம் இருக்கும். அதை க்ளிக் செய்தால் உடனே தானோஸ் என்ற வார்த்தைக்குத் தொடர்புள்ள செய்திகளில் மாயமாக மறைந்துவிடும். மீண்டும் அதே காண்ட்லெட்டை க்ளிக் செய்தால் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தில் எப்படி அவெஞ்சர்ஸ் அழிந்த பாதிப் பிரபஞ்சத்தை மீட்டுக் கொண்டுவருவார்களோ அதேபோல் கூகுள் தளத்தில் அழிந்துபோன செய்திகளும் மீண்டும் வந்துவிடும்.

இதைப் பிரத்யேகமாக அவெஞ்சர்ஸ்: என்டு கேம் படத்திற்காகச் செய்துள்ளது கூகுள்.