பெண்கள் பாதுகாப்புக்காக Google Maps புதிய திட்டம்; லைட்டிங் பாதை அறிமுகம்

பெண்களின் பாதுகாப்பு என்பது தேசிய அளவிலான பிரச்சினையாக இருக்கிறது. கூகிள் மேப் கொண்டு வரும் புதிய திட்டத்தை முதலில் இந்தியாவில் அறிமுக செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 7, 2019, 01:16 PM IST
பெண்கள் பாதுகாப்புக்காக Google Maps புதிய திட்டம்; லைட்டிங் பாதை அறிமுகம் title=

கலிஃபோர்னியா [அமெரிக்கா]: பாதுகாப்பாக வீட்டை நோக்கி நடக்க உங்களுக்கு உதவ, கூகிள் மேப் பிரகாசமாக ஒளிரும் தெருக்களை உங்களுக்கு முன்னிலைப்படுத்தி காட்ட, அதன் சேவையில் ஒரு புதிய அம்சத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எக்ஸ்.டி.ஏ டெவலப்பர்களால் (XDA Developers) கண்டுபிடிக்கப்பட்ட பார்முலா படி, "லைட்டிங்` எனப்படும் புதிய அம்சம் மூலம், பயனர்கள் அதிக வெளிச்சம் உள்ள தெருக்களை அடையாளம் காண உதவும். வரும் நாட்களில் மஞ்சள் வண்ண சிறப்பம்சத்துடன் நல்ல ஒளியுடன் கூடிய தெருக்களை இந்த அம்சம் சிறப்பிக்கும். அதன் மூலம் பயனர்கள் விளக்குகள் இல்லாத தெருக்களைத் தவிர்க்க உதவியாக இருக்கும். 

பெண்களின் பாதுகாப்பு என்பது தேசிய அளவிலான பிரச்சினையாக இருக்கிறது. இந்த அம்சம் முதலில் இந்தியாவில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகிள் மேப் மூலம் உங்கள் இடத்திற்க்கு வழியை எப்படி கண்டு பிடிப்பது? பார்போம்.

எங்கயாவது வெளியே செல்ல வேண்டும் என்றாலோ? அல்லது புதிய இடத்திற்கு வாகனத்தில் சுற்று பயணம் செய்ய வேண்டும் என நினைத்தாலோ? யாருடைய உதவியும் இல்லாமல் எப்படி சரியாக செல்வது என்று பார்போம்.

1. உங்களிடம் ஸ்மார்ட்போன் உள்ளதா? அப்படி என்றால் அதில் உள்ள லொகேஷனை ஆன் செய்யுங்கள்.

2. அதன் பிறகு கூகிள் மேப்புக்கு சென்று டேவிஸ் (Device) ஆன் செய்தால், கரண்ட் லொகேஷன் (Current location) நீங்கள் இருக்கும் இடத்தை காட்டும். இலக்கைத் தேர்வுசெய்க (Choose destination) என்று இருக்கும் இடத்தில் நீங்கள் போக வேண்டிய இடத்தின் பெயரை குறிப்பிட வேண்டும்.
3. அதன் பிறகு நீங்கள் செல்லும் வழியை ப்ளூ கலரில் காட்டும். அதில் நீங்கள் சென்றைய எத்தனை மணி நேரம் ஆகும். எந்த இடத்தில் எவ்வளவு ட்ராபிக் இருக்கிறது என்பதையும் உங்களுக்கு காண்பிக்கும்.
4. அதுமட்டுமில்லாமல் நீங்கள் போகும் வழியில் இருக்கும் ஷாப்பிங் மால், பெட்ரோல் நிலையம், ஹோட்டல் என அனைத்து விதமான இருப்பிடத்தையும் காட்டும். ஒவ்வொரு வளைவு வரும் போது உங்களுக்கு மைக் மூலம் தெரிவிக்கும்.
5. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இன்டர்நெட் இல்லாமலும் ஆப்லைன் மூலமாக கூகிள் மேப் ஆப் பயன்படுத்தலாம்.

Trending News