வோடபோன் 3 - in - One திட்டம்...13 OTT தளங்கள், மொபைல், பிராட்பேண்ட் எல்லாம் உண்டு

தனியார் தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா , ஏசியாநெட் நிறுவனத்துடன் இணைந்து கேரளாவில் Vi One என்ற ரீசார்ஜ் பிளானை அறிவித்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 25, 2024, 11:08 PM IST
  • செல்போன் ரீசார்ஜ், பிராட்பேண்ட் சேவை மற்றும் 13 ஓடிடி தளங்களுக்கான அணுகல்
  • கேரளாவில் மட்டுமே இந்த சேவை இரண்டு வகைகளில் கிடைக்கிறது.
  • 100 Mbps டேட்டா வேகம் கொண்ட ரீசார்ஜ் திட்ட விபரம்
வோடபோன் 3 - in - One திட்டம்...13 OTT தளங்கள், மொபைல், பிராட்பேண்ட் எல்லாம் உண்டு title=

தனியார் தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா , ஏசியாநெட் நிறுவனத்துடன் இணைந்து கேரளாவில் Vi One என்ற ரீசார்ஜ் பிளானை அறிவித்துள்ளது. இதன் மூலம் செல்போன் ரீசார்ஜ், பிராட்பேண்ட் சேவை மற்றும் 13 ஓடிடி தளங்களுக்கான அணுகல் ஆகிய மூன்றையும் பெறலாம்.

Vi One திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவது தான் எங்களின் நோக்கம் என தெரிவித்துள்ள வோடபோன் நிறுவனம் அதிக வேக இண்டநெட் மற்றும் நம்பகமான மொபைல் சேவைகளை பெற நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

Vi One திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் கால், ஒரு நாளைக்கு இரண்டு ஜிபி டேட்டா வசதியுடன் 40 மற்றும் 100 Mbps வேகங்களில் பிராட்பேண்ட் வசதியும் கிடைக்கும். டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி உட்பட 13 ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் இலவசமாக கிடைக்கும். இந்த ரீசார்ஜ் பிளான் மூலம் Vi Movies & TV செயலி மூலம் அனைத்து ஓடிடி தளங்களையும் பல்வேறு கருவிகளிலும் காண முடியும் . அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் அன்லிமிடெட் டேட்டா வசதி, வார இறுதி நாட்களில் 200ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் போன்ற அம்சங்களுடன் மாதம் இரண்டு முறை போனஸ் டேட்டா ஆகிய சிறப்பு அம்சங்களும் Vi One திட்டத்தில் அடக்கம். 

தற்போதைக்கு கேரளாவில் மட்டுமே இந்த சேவை இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 

40 Mbps டேட்டா வேகம் கொண்ட ரீசார்ஜ் திட்ட விபரம்

ரூ. 2,499 ரீசார்ஜ் திட்டம் மூன்று மாத வேலிடிட்டி கொண்டது. 

ரூ. 9,555 ரூபாய்க்கான திட்டம், ஒரு வருட வேலிட்டிட்டி கொண்டது.

மேலும் படிக்க | Budget 2024... BSNL-க்கு உயிர் கொடுக்கும் மத்திய அரசு... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!

100 Mbps டேட்டா வேகம் கொண்ட ரீசார்ஜ் திட்ட விபரம்

1. மூன்று மாத வேலிடிட்டி கொண்ட ரூ. 3,399 கட்டணத்துடன் வரும் இந்த ரீசார்ஜ் திட்டம் 

2, ஒரு வருட வேலிடிட்டி கொண்ட ரூ. 12,955 ரூபாய்க்கான திட்டம்.

ஏசியானட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மூர்த்தி சகாந்தி, வாடிக்கையாளர்களுக்கு மொபைல் சேவை, பொழுதுபோக்கு, பிராட்பேண்ட் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தருவதில் நிறுவனம் பெரும் மகிழ்ச்சி அடைகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Reliance Jio: வாடிக்கையாளர் குரலுக்கு செவி சாய்த்த ஜியோ... ரூ.349 பிளானில் அதிரடி மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News