பெண்களுக்கான ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் தொடங்கியது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகள் முடிவில் இந்தியா மற்றும் சீனா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
பெண்களுக்கான 4-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்று இந்தியா-சீனா அணிகள் மோதின.
2-3 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது. லீக் முடிவடைந்த நிலையில் புள்ளி பட்டியலில் சீனா 9 புள்ளிகளுடன் முதலிடமும் இந்தியா 7 புள்ளிகளுடன் 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-சீனா அணிகள் மீண்டும் மோதுகின்றன. இந்த போட்டி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.