சிங்கப்பூர்: பெண்களுக்கான ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் தொடங்கியது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகள் முடிவில் இந்தியா மற்றும் சீனா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
நேற்று மாலை நடந்த இறுதி ஆட்டத்தில் சீனா - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய பெண்கள் அணி 2-1 என சீன அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 13-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. 44-வது நிமிடத்தில் சீன அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீராங்கனை ஷோங் மெங்லிங் அபாரமாக இந்த கோலை அடித்து அசத்தினார். 60-வது நிமிடத்தில் இந்திய அணி 2-வது கோலை அடித்து சீனாவுக்கு அதிர்ச்சி அளித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோலை நோக்கி அடித்த பந்து தடுத்து திரும்பியதை தீபிகா தாக்குர் துரிதமாக செயல்பட்டு கோலாக மாற்றினார். முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
BIG CONGRATULATIONS !!!#India beat #China 2-1 in final to lift Women's #AsianChampionsTrophy2016 #hockey title. pic.twitter.com/GW5LmK8NLR
— Doordarshan Sports (@ddsportschannel) November 5, 2016
Congratulations to Indian Women's Hockey team on defeating China 2-1 to clinch Asian Champions Trophy 2016 #ACT2016 #INDvCHN pic.twitter.com/az5gDRjcFd
— Haryana BJP (@BJP4Haryana) November 5, 2016