பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் நடத்திய தாக்குதலில் உயிர் பிழைத்து வெளிநாட்டில் வசித்து வந்த மலாலா தற்போது 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாகிஸ்தான் திரும்பி உள்ளார்.
காபூலின் மேற்கு பகுதியில் தலிபான் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைத்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஜிப் டானிஷ் கூறுகையில், குறைந்தபட்சம் 24 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 40 பேர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தலிபான் அமைப்பினர் பெரும்பாலும் ஆப்கானிய அரசாங்கத்திற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் தலைகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காபூல் குண்டு வெடிப்பில் 80 பேர் கொல்லப்பட்டதாகவும் 350 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிய செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
Afghan Ministry of Health says nearly 80 killed and 350 wounded in Kabul blast: Afghanistan media
— ANI (@ANI_news) May 31, 2017
ஆப்கானிஸ்தானின் பாராளுமன்ற தொகுதி எம்.பியான மிர் வாலியின் வீட்டில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஹேல்மண்ட் பாராளுமன்ற தொகுதி எம்.பியான மிர் வாலியின் வீடு உள்ளது. நேற்று மாலை தலீபான் பயங்கரவாதிகள் இவரது வீட்டில் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்கேயுள்ள மசார்-இ-ஷரிப் நகரில் அமைந்துள்ள ஜெர்மன் நாட்டுத் தூதரகம் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடை பெற்றது. in தா தாக்குதலில் 2 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கும் மாளிகை அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு தாலிபன்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலா மாளிகை வளாகத்திற்குள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிரக்குகளுடன் சென்று தாலிபன்கள் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.