ஆப்கானிஸ்தானின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷித் கான் (Rashid Khan) தனது நாட்டிற்கு ஆதரவாக பேசியுள்ளார். அவரின் நாட்டுப்பற்றை பார்த்து ஆப்கானிஸ்தான் மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பின்னர் பல முன்னாள் அரசு அதிகாரிகள் காணாமல் போயுள்ளதாக அந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை தெரிவித்துதனர்.
கடந்த சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் பரபரப்பான பல சம்பவங்கள் நடந்து விட்டன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட ஆப்கானின் கிட்டத்தட்ட அனைத்து நகரங்களையும் தாலிபான் தன்வயப் படுத்தியது.
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிப்பதற்காக விமானத்தின் மீது ஏறி ஆபத்தான முறையில் பயணித்து தவறுதலாக கீழே விழுந்து உயிர் இழந்த இரண்டு பேரில் ஒருவர் ஆப்கானை சேர்ந்த கால்பந்து வீரர் ஜக்கி அன்பர் என்பது தெரியவந்துள்ளது.
காந்தஹாரில் பணிபுரியும் 21 வயது பெண் ஆசிரியர் ஒருவர் தான் காபூலுக்கு தப்பி வந்ததாகக் கூறினார். காந்தஹாரில் அவர் எப்போதும் வீட்டிலேயே இருந்ததாகவும், வெளியே செல்ல முடியாத சூழல் இருந்ததாகவும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்ககள் தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியா உட்பட பல நாடுகளின் குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேற்ற சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபானுக்கு பல பின்னடைவுகள் வரத் தொடங்கியுள்ளன. சர்வதேச நாணய நிதியம் (IMF) தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள வளங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் பேசிய தலிபானின் மூத்த உறுப்பினர், இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா ஒட்டுமொத்த ஆட்சி பொறுப்பில் இருப்பார் என்று கூறினார்.
தலிபான்களின் பயம் 7 மாத சிறுமியை பெற்றோரிடமிருந்து பிரித்துவிட்டது. இந்த அப்பாவி குழந்தை தனது பெற்றோரிடமிருந்து பிரிந்து காபூல் விமான நிலையத்தில் ஒரு பிளாஸ்டிக் கூடையில் அழுது கொண்டிருந்தது.
தலிபான்களால் ஆஃப்கன் கைப்பற்றப்பட்ட பிறகு, அவர்கள் என்னையும், என்னைப் போன்ற மற்றவர்களையும் கொன்றுவிடுவார்கள் என்று அச்சம் தெரிவித்திருக்கிறார்கள் பல பிரபல பெண்கள். அவர்களில் முக்கியமானவர் ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் ஜரிஃபா கஃபாரி.
ஆப்கானிஸ்தானில் நிலைமை குறித்த ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி வெளியேறும் மக்களில் பெண்கள் யாரும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கான் நாட்டில் நெருக்கடி நிலை காரணமாக, காபூலில் உள்ள இந்திய தூதரும், தூதரக ஊழியர்களும் உடனடியாக தாயகம் திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.