Health Tips: நோய்களை ஓட விரட்டும் ‘மேஜிக்’ மசாலாக்கள்!

இந்திய சமையலறையில் காணப்படும் இந்த 5 மசாலாப் பொருட்கள் மிகவும் நன்மை பயக்க கூடியது. இது சிறுநீரகம் முதல் கல்லீரல் தொடர்பான நோய்கள் மட்டுமல்லாது உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இந்திய சமையலறையில் பயன்படுத்தப்படும் சில மசாலா உணவுகள் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளி வழங்குகிறது. இந்த மசாலாக்களை தொடர்ந்து உட்கொள்வது நமது ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

1 /5

மஞ்சளில் குர்குமின் காணப்படுகிறது. இது பல கடுமையான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மேலும், கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் மஞ்சள் மிகவும் நன்மை பயக்கும். பல சிறப்பு ஆக்ஸிஜனேற்றங்கள் மஞ்சளில் காணப்படுகின்றன. இது கல்லீரல் பாதிப்பை தடுக்கிறது.  

2 /5

இலவங்கப்பட்டை ஆரோக்கியமான மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். இலவங்கப்பட்டையில் உள்ள பல சேர்மங்கள் ஃப்ரீ ரேடிக்கல்களைக் கட்டுப்படுத்த வேலை செய்கிறது. இலவங்கப்பட்டை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிரானது.

3 /5

ஏலக்காய் உணவுகளுக்கு சுவையையும் நறுமணத்தையும் சேர்க்கிறது. தவிர, இது பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இது உயர்ந்த பிபியைக் குறைப்பதில் மிகவும் திறம்பட செயல்படுகிறது.

4 /5

ஓமம் சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது. இது ஒரு இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறது. இது அதிகப்படியான திரவத்தை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. எலக்ட்ரோலைட் அளவையும் பராமரிக்கிறது.

5 /5

இந்தியாவில் பல்வேறு உணவுகளை தயாரிக்கையில் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. இது சுவையில் கசப்பானது. ஆனால் உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும். வெந்தயம் மற்றும் வெந்தய இலைகள் இரண்டும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.