கோவை பல்லடம் அருகே போராட்டம் ஒன்றில் பங்கேற்பதாக சீமான் அறிவித்திருந்தார். அப்போராட்டத்துக்கு செல்வதற்கு முன்பாக சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சீமான் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக புகார் தொடர்பாக சென்னை ராமாபுரம் காவல் நிலையத்துக்கு விஜயலட்சுமி வரவழைக்கப்பட்டார். அவரிடம் கோயம்பேடு காவல் மாவட்ட அதிகாரி உமையாள் விசாரணை நடத்தினார்.