Do These 10 Powerful Rituals At Midnight On December 31st: 2024-ஆம் ஆண்டு முடிந்து புத்தாண்டு தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டில் பலர் என்னென்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடல்களை வைத்திருப்பீர்கள். அப்படி திட்டமிட்டு, உறுதிமொழிகளை எடுத்து செயல்பட்டாலும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று நம் அருகிலேயே இருப்பது அவசியம் ஆகும். அப்படி, நம் வாழ்வில் எண்ணிலடங்கா அதிர்ஷ்டம் கொட்ட, பண வரவு மேலோங்க சில ட்ரிக்ஸை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். இதனை ஆங்கிலத்தில் Manifestation என்று குறிப்பர். இதற்கு அர்த்தம், நாம் நினைக்கும் விஷயங்களை வாழ்வில் நடத்தி காண்பிக்க சில வழிகளை பின்பற்ற வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
1.உங்கள் பையில் காசு வைத்திருங்கள்:
அடுத்த வருடம் உங்கள் கையில் இருக்கும் காசு தீராமல் இருக்க, இந்த வருட இறுதி நாளில் உங்கள் பாக்கெட்டில் காசு வைத்துக்கொள்ளுங்கள். அது சில்லறை காசாக இருந்தால் சிறப்பு, விலை உயர்ந்த நோட் ஆக இருந்தால் இன்னும் சிறப்பு. 2025ல் உங்கள் வாழ்வில் பண மழை கொட்ட கண்டிப்பாக பர்சிலும் பாக்கெட்டிலும் காசு வைத்திருங்கள்.
2.கையில் நாணயம் வைத்திக்ருத்தல்:
டிசம்பர் 31-நள்ளிரவு 12 மணி ஆகும் போது இரண்டு கைகளிலும், ஒவ்வொரு நாணயத்தினை வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சிலர், இதை செய்தால் பண வரவுகளை தங்கள் இல்லத்திற்குள்ளும் அவர்கள் மனதிலும் வரவழைக்க இதை செய்வார்களாம்.
3.சில்லறைகளை சிதறவிடுங்கள்:
புது வருடம் பிறக்கும் நாளில், இரவு 12 மணிக்கு உங்கள் வீட்டின் அனைத்து மூலைகளிலும், அறைகளிலும் நாணயங்களை வையுங்கள். இது, உங்கள் வாழ்வில் பண வரவை வரவேற்க உதவுமாம்.
4.பருப்பு வகைகளை சாப்பிடுங்கள்:
பருப்பு வகைகள் அல்லது பீன்ஸ் வகை காய்கறிகள் பழங்காலம் முதலே பணத்துடன் சம்பந்தப்பட்டதாக பார்க்கப்படுகிறது. புது வருட சாப்பாட்டில், இந்த வகை உணவுகளையும் இணைத்துக்கொள்ளுங்கல். இது, உங்கள் நிதி நிலையை உயரச்செய்ய உதவலாம்.
5.உடையின் நிறம்:
புது வருடம் பிறக்கும் 12 மணி, நீங்கள் எந்த நிற ஆடை அணிந்திருக்கிறீர்கள் என்பதும் மிகவும் முக்கியம். தங்க நிறம் அல்லது மஞ்சள் நிறம் உங்கள் வாழ்வில் செல்வ செழிப்பை வரச்செய்யலாம். எனவே, இந்த நேர்த்தில் நீங்கள் மேற்கூறிய 2 நிற உடைகளை அணிந்தால் வரும் வருடத்தில் பணக்கார யோகம் அடிக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | 2024ம் ஆண்டில் மத்திய அரசு தொடங்கிய... முத்தான சில மக்கள் நலத் திட்டங்கள்
6.தங்கம் வைத்திருங்கள்:
2025ல் பணம் சம்பாதிக்கும் யோகத்தை பெறுவதற்கு உங்களிடம் ஏற்கனவே இருக்கும் ஏதேனும் ஒரு தங்க பொருளை பாக்கெட்டில் அல்லது பர்ஸில் வைத்துக்கொள்ளலாம். அது ஒரு தங்க நாணயமாக இருக்கலாம், ஒரு மோதிரம், மூக்குத்தி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதை செய்தால், உங்கள் வாழிவிலும் செல்வமும் செழிப்புமாக மின்னும்.
7.கடன்களை தீர்த்துவிடுங்கள்:
உங்களது பெரிய கடன் தொகைகளை தீர்க்க முடியவில்லை என்றாலும், முடிந்த அளவிற்கு உங்கள் கைகளில் இருக்கும் சின்ன சின்ன கடன் தொகைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள். இது, அடுத்த வருடத்தில் கொஞ்சமாவது பணச்சுமை இல்லாமல் இருக்க உதவுவதோடு செல்வத்தை சரியாக அடுத்த வருடம் பயன்படுத்தவும் உதவும்.
8.சேமித்து வையுங்கள்:
புத்தாண்டு பிறந்தவுடன் உங்களுக்கு கிடைக்கும் முதல் பணத்தையும், முதல் நாணயத்தையும் சேமித்து வையுங்கள். அது, உங்களுக்கு பணம் சம்பாதிக்க அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கலாம்.
9.அரிசி அல்லது தானியங்களை வைத்துக்கொள்ளுங்கள்:
உங்கள் பர்ஸில் ஒரு அரிசி அல்லது தானியத்தை வைத்துக்கொள்ளுங்கள். இது, உங்களது பணம் வருடந்தோறும் வளர உதவலாம்.
10.பணத்திற்கான ஜாடி:
பணத்தை சேமித்து வைக்க ஒரு ஜாடியை வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு சிறிய தொகையை கூடிய சில்லறைகள் அல்லது நோட்டை போடுங்கள். இப்படி, தினமும் நீங்கள் சேமித்து வைப்பீர்கள் என்பதை உங்களுக்குள் நீங்களே உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | புது வருட உறுதி மொழிகளை தவறாமல் பின்பற்ற 7 எளிய டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ