பல்வேறு கட்சியில் இருந்து நம்ம கட்சிக்கு வருபவர்களை மதித்து அவர்களை அரவணைக்க வேண்டும்.. ஆனால் அன்று சைக்கிளில் கொடி கட்டி போஸ்டர் ஒட்டிய தொண்டனுக்கு தான் பதவி வழங்கப்படும் என தொண்டர்கள் மத்தியில் தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு.
மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம் என்று விஜய் தொண்டர்களுக்கு கடிதம்.
வேலூரில் தமிழக வெற்றி கழகம் கட்சியின், வேலூர் சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்று விழா மாசாக திறக்கப்பட்டது. விஜய் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும் என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெறும் மாநாடு குறித்து திருவள்ளூர் மற்றும் தஞ்சை ஆகிய பகுதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு பேசினார்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இலங்கை அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. அவர்களின் அடாவடி நடவடிக்கையை தடுத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - புஸ்ஸி ஆனந்த்.
தளபதி அவரின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் முறையான அனுமதியை பெற்று கொடி ஏற்றுமாறு தொடர்களுக்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பயணத்தை மும்முரமாக தொடங்கியுள்ளார். சினிமாவின் தளபதியாக விஜய்யும், அரசியலின் தளபதியாக மு.க.ஸ்டாலினும் இருந்த நிலையில், அரசியலில் விஜய் வந்ததால், இனி தளபதி யார் என்று நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். இதுகுறித்த சுவாரஸ்ய தொகுப்பை காணலாம்.
The Greatest of All Time: விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள GOAT படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி இல்லை. இன்னும் 2 வாரத்தில் ட்ரைலர் வெளியாக உள்ளது.
Tamilaga Vetri Kalagam: தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு இடத்தை நாங்கள் தேர்வு செய்து கொண்டிருக்கிறோம், இடத்தை தேர்வு செய்த பிறகு அறிவிப்புகள் வெளியாகும் - புஸ்ஸி ஆனந்த்.
கரூரில் பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Tamilaga Vetri Kalagam: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விஜய்யை விட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும் விஜய்யின் நெருங்கிய நண்பருமான புஸ்ஸி ஆனந்த் பிரிந்து விட்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.