லேட்டா வந்தாலும் மாஸாக வரும் 'தி லெஜண்ட்' எந்த ஓடிடியில் தெரியுமா?

தொழிலதிபர் சரவணன் அருள் நடிப்பில் உருவான ஆக்சன் திரைப்படம் 'தி லெஜெண்ட்'. ஜே.டி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே சரவணன் அருள் மக்கள் மத்தியில் தொலைக்காட்சி விளம்பரம் மூலம் அறிமுகமாயிருந்தார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடலா, கீத்திகா திவாரி, பிரபு, சுமன், நாசர், விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, தம்பி ராமையா, விஜயகுமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

Trending News