WhatsApp-ல் புதிய அம்சம் இணைப்பு; ஆண்ட்ராய்டு வாசிகள் குஷி!

இனி ஸ்மார்ட்போனின் டவுன்லோட் செய்யப்பட்டு டெலிட் செய்யப்பட்ட பைல்களையும் மீண்டும் பதிவிறக்கலாம்..! 

Written by - Devaki J | Last Updated : Apr 17, 2018, 06:52 PM IST
WhatsApp-ல் புதிய அம்சம் இணைப்பு; ஆண்ட்ராய்டு வாசிகள் குஷி! title=

ஒரு முறை டவுன்லோட் செய்யப்பட்டு ஸ்மார்ட்போனின் மெமரியில் இருந்து டெலிட் செய்யப்பட்ட மீடியா பைல்களை, மீண்டும் டவுன்லோட் செய்யும் புதிய அம்சத்தினை வாட்ஸ்ஆப் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்துள்ளது. 

அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களையும் கவர்ந்துள்ள இந்த புதிய அம்சத்தினை தொடர்ந்து மேலும் ஒரு புதிய அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் காணப்பட்டுள்ளது.முன்னதாக வாட்சப் பயனர்கள் தைகளின் மொபைலில் இருந்து நீக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்கவோ அல்லது பதிவிறக்கவோ முடியாது. WABetaInfo-ல் நீக்கப்பட்ட ஊடக கோப்புகள் படங்கள், வீடியோக்கள், GIF-கள் மற்றும் குரல் செய்திகளிலிருந்தும் உள்ளன. இந்த அறிவிப்பு, WhatsApp இல் உள்ள 2.18.106 மற்றும் 2.18.110 புதுப்பிப்புகளுக்கு 

இடையில் சேர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. WhatsApp-ல் இப்போது 1.5 பில்லியன் பயனர்கள் (MAU) உள்ளனர். அவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 60 பில்லியன் செய்திகளை பரிமாறி வருகின்றனர். இது இந்தியாவில் மட்டும் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளது.

Trending News