அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கிரீன்வுட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். சத்தம் கேட்டு பொதுமக்களில் துப்பாக்கி வைத்திருந்த நபர், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை பதிலுக்குச் சுட்டார். இதில் அந்த மர்ம நபரும் உயிரிழந்தார். இதனால், இந்த துப்பக்கிச்சூட்டில் மொத்தமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் படிக்க | அமெரிக்காவில் தொடர்கதையாகும் துப்பாக்கிச் சூடு; சிகாகோவில் 5 பேர் பலி; 16 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டினால் ஆண்டுக்கு சுமார் 40,000 பேர் உயிரிழப்பதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4 அன்று, சிகாகோ நகரில் நடந்த அணிவகுப்பில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடந்த மே மாதம் நியூயார்க்கில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 10 கறுப்பின மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டெக்சாஸில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் நிகழந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து துப்பாக்கி வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
மேலும் படிக்க | துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நியூயார்க்கில் புதிய சட்டம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ