ஆன்லைனில் ஜிஹாதி மணப்பெண்கள் பெயரில் ISIS பணம் திரட்டிய சதி அம்பலம்

சிரியாவில் உள்ள குர்திஷ் அகதிகள் முகாம்களில் (Kurdish refugee camps) இருந்து மேற்கத்திய ஜிஹாதி மணப்பெண்களை மீட்பது (Western jihadi brides) என்ற பெயரில் ஒரு இஸ்லாமிய அமைப்பு சந்தேகத்திற்குரிய வகையில் நிதி திரட்டியதாக இங்கிலாந்து வலைத்தளம் டெய்லி மெயில் (UK website Daily Mail) செய்தி வெளியிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 29, 2020, 09:01 PM IST
ஆன்லைனில் ஜிஹாதி மணப்பெண்கள் பெயரில் ISIS பணம் திரட்டிய சதி அம்பலம் title=

புதுடில்லி: சிரியாவில் உள்ள குர்திஷ் அகதிகள் முகாம்களில் (Kurdish refugee camps) இருந்து மேற்கத்திய ஜிஹாதி மணப்பெண்களை மீட்பது (Western jihadi brides) என்ற பெயரில் ஒரு இஸ்லாமிய அமைப்பு சந்தேகத்திற்குரிய வகையில் நிதி திரட்டியதாக இங்கிலாந்து வலைத்தளம் டெய்லி மெயில் (UK website Daily Mail) செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு பரீட்சார்த்த முயற்சியும் செய்யப்பட்டது.

சிரியாவில் முகாம்களில் இருந்து ஜிஹாதி மணப்பெண்களை மீட்கும் பெயரில் பணம் திரட்டப்படுகிறது. சிரியாவில் உள்ள அல்-ஹோல் (Al-Hol Camp) முகாமில் உள்ள பெண்களும் மீட்கப்படுவதாக கூறப்படுகிறது. தனது 15 வயதில் பிரிட்டனை விட்டு வெளியேறி ISIS அமைப்பில் இணைந்த ஷமிமா பேகமும் (Shamima Begum) இந்த முகாமில் வசித்து வருகிறார்.

Shamima Begum என்ற அந்த பெண்ணை பிரிட்டனில் தங்க அனுமதிக்கும் முடிவை கடந்த வாரம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் அரசாங்கம் சவால் செய்தது. இது குறித்து நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்கள் அவரை பிரிட்டனில் தங்க அனுமதிப்பது 'குறிப்பிடத்தக்க தேசிய பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும்' என்று கவலையை தெரிவித்தனர்.

Also Read | EU parliamentarians: 26/11 குற்றவாளிகளுக்கு எதிராக பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? 

பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய இந்த முகாம்களில் சுமார் 13,500 வெளிநாட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் வசிக்கின்றனர். அல்-ஹோலில் வசிக்கும் பிரிட்டிஷ் பெண்கள் முகாம்களிலிருந்து வெளியேற பணம் திரட்டுவதாக கூறுபவர்கள் Caged Pearls என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கை இயக்கி வருகின்றனர். அதில், கைகளில் சுவரொட்டிகளை வைத்திருக்கும் பெண்கள் தங்களுக்கு இவ்வளவு பணம் தேவை என்று கூறுகிறார்கள், அப்போதுதான் அவர்கள் இந்த முகாம்களிலிருந்து வெளியேறி தங்கள் நாட்டுக்குச் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

ஒரு முகாமில் இருந்து துருக்கிக்கு வந்திருக்கும் சுமயா ஹோம் (Sumaya Homm) என்பவரும் இப்படி நிதி திரட்டியிருக்கிறார். சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) அமைப்பிற்காக போராடும் போது கொல்லப்பட்ட ஒரு பிரிட்டன் குடிமகனின் மனைவி என்று அவர் தன்னைப் பற்றி கூறுகிறார். கணவர் மதம் மாறியவர் என்றும் மனைவி கூறுகிறார்.

ஹோம்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் புர்காக்களில் பெண்களின் புகைப்படத்தை கையில் பலகைகளுடன் வைத்து, உதவி கோரி, அங்குள்ள சிரிய முகாம்களில் இருந்து வெளியேற விரும்பும் நபர்களுக்கு நன்கொடை கேட்கிறார். இந்த புகைப்படத்தைப் பகிர்ந்த ஹோம்ஸ் 'இவர் எனது தோழி, அவருக்கு உதவி தேவை. தயவுசெய்து அவருக்கு உதவுங்கள். உங்களால்   உதவ முடியாவிட்டால், நன்கொடை  செய்யக்கூடியவர்களுக்கு தகவல் கொடுங்கள்' என்று எழுதியிருக்கிறார்.

Read Also | ஜோ பைடன் நிர்வாகத்தை நினைத்து சீனா அஞ்சும் காரணம் என்ன..!!!

பல சட்டவிரோத வழிகளில் பணம் பெறப்படுகிறது

ஹோம்ஸுக்கு உதவி செய்வதாக கூறி டெய்லி மெயிலின் நிருபர் ஒருவர் அவரை அணுகியபோது, telegram செயலி வழியாக பேசச் சொல்லப்பட்டது. இது தீவிரவாதிகள் மற்றும் குற்றவாளிகள் பயன்படுத்தும் மறைகுறியாக்கப்பட்ட செயலி என்பது குறிப்பிடத்தக்கது.  telegram app மறைகுறியாக்கப்பட்ட, அதிக பாதுகாப்புக் கொண்ட செயலி என்பதால் பயங்கரவாதிகள் அதை பயன்படுத்தி பேச விரும்புகிறார்கள்.

இது மட்டுமல்லாமல், அந்த பெண் கிரிப்டோகரன்சி பிட்காயின் (cryptocurrency bitcoin) மூலம் நன்கொடைகளை கொடுப்பது பற்றி பேசினார், ஆனால் நிருபர் மறுத்தபோது, ஜோர்டானில் உள்ள தனது சக ஊழியரின் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யச் சொன்னார். ஒட்டுமொத்தமாக, எந்தவொரு வகையிலும் பணத்தை பெற்றுக் கொள்வது பதிவு செய்ய முடியாத வகையில் நன்கொடைகளை பெற்றுக் கொள்ள அந்த பெண் விரும்பினார். இறுதியாக, பணத்தைப் பெற்றுக் கொள்ள பரிமாற்ற முகவரை அனுப்புவதாக அவர் கூறினார்.

Also Read | சீன அதிபர் ஜி ஜின்பிங் படையினரிடம் சிறப்புரை... சீனா போருக்கு தயாராகிறதா...!!!

சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நபருக்கும் பணம் கொடுக்க முடியாது என்று சொன்னதால்,ஒரு  உறையில் பணம் வைத்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. அனஸ் என்ற நபர் அதை எடுக்க வந்தார், ஆனால் அதில் ஒரு புத்தகம் இருப்பதை பார்த்து,  அதிர்ந்து போனார். பின்னர், போலீஸ் விசாரணையில், அவர் பணம் வாங்க வந்ததை மறுத்துவிட்டார். மறுபுறம், ஹோம்ஸ் என்ற பெண்ணும் இது தொடர்பாக பேச மறுத்தார், இந்த விவகாரம் பொய் என்று சொல்லிவிட்டார்.  

பின்னர் செய்யப்பட்ட விசாரணையில், ஹோம்ஸ் தற்போதும் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. அதோடு, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) அமைப்பின் உறுப்பினர்கள் ஆன்லைனில் பணம் திரட்ட அவருக்கு உதவுகிறார்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது. 

Also Read | பயணிகளுடன் உடலுறவில் ஈடுபடுவதாக சர்ச்சையில் சிக்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ்!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News