நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி, மூன்று பேர் காணவில்லை

நேபாள நாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பரிதாபமாக உயிரிழந்தனர்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 4, 2020, 10:34 PM IST
  • நேபாளத்தின் பஜாங் மாவட்டம் மல்லேசி கிராமத்தில் அதிகாலை 2 மணியளவில் நிலச்சரிவு
  • நிலச்சரிவில் சிக்கிய இரண்டு குழந்தைகள் உட்பட நால்வர் பலி
  • மூன்று பேரை காணவில்லை
நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி, மூன்று பேர் காணவில்லை title=

காத்மண்டு: நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் நேபாளத்தில்  பல்வேறு பகுதிகளில் பரவலாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிவிட்டது. 

நிலச்சரிவில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அதிகாலை 2 மணியளவில் பஜாங் மாவட்டத்தில் மல்லேசி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

Also Read | J&K Kulgam: என்கவுண்டரில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்

நிலச்சரிவில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்றும்,  மூன்று பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.  நிலச்சரிவால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.  சில வீடுகள் புதையுண்டு போனதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நேபாள காவல்துறையும், அந்நாட்டு ராணுவமும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

Trending News