டாக்கா: மோதியூர் ரஹ்மான் நிசாமி என்பவர் வங்கதேசத்தில் உள்ள ஜமாத் இ இஸ்லாமி தலைவர் ஆவர். 1971-ம் ஆண்டு வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போர் வெடித்தது. அப்போது இவர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வங்கதேசம் நீதி மன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மோதியூர் ரஹ்மான் நிசாமி வங்கதேச உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனுவை 5-ந் தேதி அந்நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதனை அடுத்து அவருக்கு தூக்கு தண்டனை நேற்று நள்ளிரிவில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் வங்கதேச அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஜமாத் இ இஸ்லாமி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப் படும் எனவும் போராட்டத்துக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் இடப்பட்டுள்ளது. இதனால் அந்நாடு முழுவதும் ஒரு பதற்றமான சூல்நிலை ஏற்பட்டுள்ளது.