ஆஸ்கர் விருது 2020: சிறந்த துணை நடிகை லாரா டெர்ன்!

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை லாரா டெர்ன் தட்டிச் சென்றார்.

Last Updated : Feb 10, 2020, 09:41 AM IST
ஆஸ்கர் விருது 2020: சிறந்த துணை நடிகை லாரா டெர்ன்! title=

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை லாரா டெர்ன் தட்டிச் சென்றார்.

சர்வதேச அளவில் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் அகாடமி விருது. 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவதற்காக உலகில் உள்ள அனைத்து மொழி படங்களும் போட்டியிடும்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது. விழாவில் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

சிறந்த துணை நடிகைக்கான விருதை அறிவிக்க மஹேர்ஷலா அலி மேடை ஏறினார். சின்ன புன்னகையுடன், அகாடமி விருது கார்டை பார்த்து, சிறந்த துணை நடிகைக்கான விருது மேரேஜ் ஸ்டோரி படத்தில் நடித்த நடிகை லாரா டெர்ன் வென்றுள்ளார் என சொல்ல டால்பி தியேட்டரே அதிர்ந்தது. 

இந்நிலையில் ஜோஜோ ராபிட் படத்துக்காக ஸ்கார்லெட் ஜோஹன்சன் துணை நடிகைக்கான போட்டியில், இருந்த நிலையில், லாரா டெர்ன் விருதை வென்றுள்ளார்.

Trending News