பிரபல நடிகை ஸ்ரேயா தனது காதலரை திருமணம் செய்து உள்ளார். ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், மழை உள்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா.
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர்.
இவர் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர்களுடைய திருணம் குடும்ப முறைப்படி மார்ச் 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த தகவலை ஸ்ரேயா மறுத்திருந்தார்.
அதை தொடர்ந்து, ஸ்ரேயா மற்றும் ஆண்ட்ரே கோஸ்சீவ் திருமணம் மும்பையில் உள்ள ஸ்ரேயா வீட்டில் அவர்களின் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் மார்ச் 12 ஆம் நடந்தது. இந்த திருமணத்தில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டதாகவும். பிரபலங்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஸ்ரேயாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரேயா மற்றிம் ஆண்ட்ரே கோஸ்சீவ் திருமணத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
Cute Couple #ShriyaSaran and #AndreiKoscheev Dance in their Marriage Reception Yesterday (19-03-2018)#ShriyaWedding #ShriyaSaranwedding#HappyMarriedLifeShriyaSaran#HappyMarriedLifeShriya pic.twitter.com/geLerV0pjq
— ShriyaSaran(@ShriyaSaran360) March 20, 2018