கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இசை வரும் மே 9-ம் நாள் வெளியாகும் என நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இப்படத்தில் வரும் செம்ம வெயிட்டு என்ற பாடலை மட்டும் மே 1-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரவேற்பை பெற்றாலும் இப்படத்திற்கு அதிக தடங்கல்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தனுஷின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்திலிருந்து `ஆல்பம் பிரிவ்யூ' என்ற வீடியோ ஒன்றை வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் `காலா' படம் சொல்லும் கதையை மேலோட்டமாக பா.இரஞ்சித்தும், படத்தில் எந்த மாதிரியான பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது என்று சந்தோஷ் நாராயணனும் பகிர்ந்துள்ளனர். அவர்கள் பேசுவதிலிருந்தே தெரிகிறது படம் முழுவதும் அரசியல் களத்தை கொண்டுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. `செம வெயிட்டு' என்று சில தினங்களுக்கு முன்பு, படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. வெளியானபோது சக்கபோடு போட்ட அந்தப் பாடல், இதுவரை 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
அந்தப் பாடலைத் தொடர்ந்து போராடுவோம், நிக்கல் நிக்கல், கண்ணம்மா, தெருவிளக்கு, உரிமையை மீட்போம், தங்க சேலை, கற்றவை பற்றவை, என மொத்தம் ஒன்பது பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. படத்தில் பாடல்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் வருகிறது என்று ரஞ்சித்தும் அந்தப் பாடல்கள் தரும் உணர்வை சந்தோஷ் நாராயணனும் இந்த வீடியோவில் பகிர்துள்ளனர். படம் மட்டுமல்லாமல் ஒரு சில பாடல்களில் இடம் பெற்றிருக்கும் வரிகளும் அரசியல் பேசியிருக்கிறது.
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு உணர்வைக் உணர்த்தும் என்பது பாடல்களின் சில வரிகளைக் கேட்கும் போதே தெரிகிறது. அது மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த `காலா' பட ஷூட்டிங் ஸ்பாட்டுமே திருவிழா போல் இருந்திருக்கிறது என்பது இவர்களின் பேச்சை வைத்தே தெரிகிறது. பிருந்தா மாஸ்டர், அருண்ராஜா காமராஜா, சமுத்திரக்கனி, கஸ்தூரி, சண்டைப் பயிற்சியாளர்கள், கோரிகிராஃபர்கள் எனப் படத்தில் வேலைபார்க்கும் ஒட்டுமொத்த படக் குழுவுமே இன்பம் அனுபவித்து வேலை பார்த்துள்ளனராம்.