வங்கிகளை விட பிக்ஸட் டெபாசிக்கு அதிக வட்டியை தரும் பஜாஜ்! எவ்வளவு தெரியுமா?

Bajaj Finance: பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த புத்தாண்டு முதல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை வழங்கி வருகிறது.  கிட்டத்தட்ட 8.85% வட்டி தருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jan 6, 2024, 07:48 AM IST
  • பஜாஜ் நிறுவனத்தின் அடுத்த ஆபர்.
  • பிக்ஸட் டெபாசிக்கு அதிக வட்டி.
  • 8.85% வரை வட்டி வழங்குகிறது.
வங்கிகளை விட பிக்ஸட் டெபாசிக்கு அதிக வட்டியை தரும் பஜாஜ்! எவ்வளவு தெரியுமா? title=

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி & வலைதளத்தின் மூலம் செய்யப்படும் டெபாசிட்டுகள் (வைப்புத் தொகைகள்) மீது ஒப்பீட்டளவில் 8.85% என்ற உயர்வான வட்டி விகிதத்தை வழங்குகிறது. சிரமம் இல்லாத செயல்பாட்டின் மூலம் டிஜிட்டல் செயல்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்க டெபாசிட்தாரர்களை ஊக்குவிக்கிறது. இந்நாட்டின் மிகப்பெரிய நிதிசார் சேவைகள் குழுமங்களுள் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வ்-ன் ஒரு அங்கமான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், அதன் செயலி மற்றும் வலைதளம் வழியாக செய்யப்படும் டெபாசிட்டுகள் (வைப்புத் தொகைகள்) மீது 8.85% வரை பிரத்யேக வட்டி வீதங்களை வழங்கும் டிஜிட்டல் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டம் அறிமுகம் செய்யப்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறது.

மேலும் படிக்க | ITR: புதிய வரி விதிப்பு முறையில் இருந்து பழைய வரி விதிப்பு முறைக்கு மாற வேண்டுமா..!!

பழைய ஆண்டு முடிந்து புதிய ஆண்டு பிறந்திருக்கும் நிகழ்வையொட்டி இந்த டிஜிட்டல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமும் சேமிப்பு அனுபவத்தில் ஒரு புதிய நிலைமாற்றத்தை கொண்டுவருகிறது. டெபாசிட்டுகளை செய்வதற்கு டிஜிட்டல் மற்றும் உதவப்படும் டிஜிட்டல் வழிமுறையை பயன்படுத்த வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதன் வழியாக பஜாஜ் ஃபைனான்ஸ் இதை சாத்தியமாக்குகிறது. பஜாஜ் ஃபின்சர்வ் செயலி மற்றும் வலைதளத்தில் டெபாசிட் செய்வதற்கான பயணம் எளிதானது, பாதுகாப்பானது மற்றும் சிரமமற்றது; மற்றும் FD புக்கிங் செயல்முறையை உடனடியானதாக ஆக்குகிறது. 

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி மற்றும் வலைதளத்தின் மீது 42 மாதங்கள் காலஅளவிற்கு புக்கிங் செய்யப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்காக மூத்த குடிமக்களுக்கு ஒரு ஆண்டுக்கு 8.85% வரை வட்டியினை பஜாஜ் ஃபைனான்ஸ் வழங்குகிறது. இத்திட்டம் 2024 ஜனவரி 2-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. 60 ஆண்டுகள் வயதுக்கு குறைவான டெபாசிட்தாரர்கள், ஒரு ஆண்டுக்கு 8.60% வரை வட்டியினை ஈட்டலாம். 42 மாதங்கள் காலஅளவிற்கு ரூ. 5 கோடி வரையிலான தொகையை புதிதாக டெபாசிட் செய்வது மற்றும் முதிர்ச்சியடையும் டெபாசிட்களை மீண்டும் புதுப்பிக்கும்போது, திருத்தியமைக்கப்பட்ட வட்டி வீதங்கள் இவைகளுக்கு பொருந்தும். 

பஜாஜ் ஃபைனான்ஸ்-ன் ஃபிக்ஸட் டெபாசிட்கள் மற்றும் முதலீடுகள் துறையின் தலைவர் திரு. சச்சின் சிக்கா கூறியதாவது: “சிரமம் இல்லாத எமது செயல்முறைகள், கவர்ச்சிகர வட்டி விகிதங்கள் மற்றும் வாடிக்கையாளருக்கு தோழமையான கொள்கைகள் ஆகியவை பஜாஜ் ஃபைனான்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட்கள் மீது நுகர்வோர்களின் அனுபவத்தை வரையறை செய்கிற சிறப்பு அம்சங்களாகும். 2 ஆண்டுகள் காலஅளவில் எமது மொத்த டெபாசிட்களின் தொகை 2x மடங்கு வளர்ச்சியடைந்திருப்பது, பஜாஜ் பிராண்ட் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கைக்கு நேர்த்தியான சான்றாகும். எமது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் இப்போது, டிஜிட்டல் வழிமுறையை முதலில் பயன்படுத்துமாறு அதற்கு முன்னுரிமை அளிக்க டெபாசிட்தாரர்களை தூண்டுகிறது. பஜாஜ் ஃபின்சர்வ் செயலி மற்றும் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும் மிக உயர்வான வட்டி விகிதங்களோடு தொடக்கத்திலிருந்து இறுதிவரை மிக எளிமையான டிஜிட்டல் பயணமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்களை செய்யும் இனிய அனுபவத்தை இது வழங்குகிறது.”

2023 செப்டம்பர் 30 அன்று அதன் செயலி தளத்தில் 44.68 மில்லியன் வலைதள பயன்பாட்டாளர்களோடு மொத்தத்தில் 76.56 மில்லியன் வாடிக்கையாளர்களை பஜாஜ் ஃபைனான்ஸ் கொண்டிருக்கிறது. data.io அறிக்கையின்படி இந்தியாவில் ஃபிளேஸ்டோரில் நிதிசார் சார்ந்த பிரிவில் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளுள் 4வது இடத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் செயலி இருக்கிறது.  2023 செப்டம்பர் 30 அன்று 1.4 மில்லியனுக்கும் அதிகமான டெபாசிட்கள் மற்றும் ரூ. 54,821 கோடிக்கும் அதிகமான ஒருங்கிணைக்கப்பட்ட டெபாசிட் புத்தகத்துடன் இந்நாட்டில் மக்களிடமிருந்து மிக அதிகமாக டெபாசிட்களைப் பெறும் வங்கி சாரா நிதிநிறுவனமாக (NBFC) இந்நிறுவனம் உருவெடுத்திருக்கிறது. 

முதலீட்டாளர்களுக்கு அதிக பாதுகாப்பான முதலீட்டு விருப்பத்தேர்வை வழங்கும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட் செயல்திட்டம், கிரிசில்-ன் AAA/ஸ்டேபில் மற்றும் ICRA’ன் AAA (ஸ்டேபில்) என்ற மிக உயர்வான பாதுகாப்பு நிலைப்புத்தன்மை தரநிலைகளை கொண்டிருக்கிறது.  பஜாஜ் ஃபைனான்ஸ்-ன் செயலி, முதலீட்டு சந்தை அமைவிட வசதியையும் சேர்த்து வழங்குகிறது; இதில், பல்வேறு மியூச்சுவல் ஃபண்டுகளின் விரிவான அணிவரிசையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.

மேலும் படிக்க | இன்று முன் அதிரடியாய் குறையும் விமான கட்டணங்கள்... பயணிகள் ஹாப்பி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News