இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 2021 ஆம் ஆண்டில் 11.5 சதவிகிதமாக இருக்கும்: IMF

2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 11.5 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது.

Last Updated : Jan 27, 2021, 04:34 PM IST
இந்திய  பொருளாதார வளர்ச்சி விகிதம் 2021 ஆம் ஆண்டில் 11.5 சதவிகிதமாக இருக்கும்: IMF

2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.5 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது. கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மட்டுமே உள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு இரட்டை இலக்கங்களில் இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

செவ்வாயன்று IMF வெளியிடப்பட்ட  சமீபத்திய அறிக்கையில், உலக பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் மிக  வேகமாக முன்னேறும் என்றும் உறுதிபடக் கூறியுள்ளது. 2020 ஆம் ஆண்டில், தொற்றுநோய் காரணமாக, பொருளாதாரம் எட்டு சதவிகிதம் குறையும் என்று மதிப்பிடப்பட்டது.

சமீபத்திய அறிக்கையில், நாணய நிதியம் 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 11.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. இது இரண்டாவது இடத்தில் சீனா 8.1 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும். ஸ்பெயினில் 5.9 சதவீத வலர்ச்சியும், பிரான்ஸில் 5.5 சதவீத வளர்ச்சியும் இருக்கும் ன்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரம் 2020 ஆஎட்டு சதவீத வளர்ச்சி அடையும் என மதிப்பிட்டிருந்த சர்வதேச நாணய நிதியம் தனது தரவைத் திருத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2022 ஆம் ஆண்டில் 6.8 சதவீதமாகவும், சீனாவின் (China) வளர்ச்சி விகிதம் 5.6 சதவீதமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமீபத்திய மதிப்பீட்டின் மூலம், விரைவான பொருளாதார வளர்ச்சியுடன் வளரும் நாடு என்ற நிலையை இந்தியா மீண்டும் பெற்றுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்ட்லின் ஜார்சிவா, 'தொற்றுநோயையும் அதன் பொருளாதார தாக்கத்தையும் கையாள்வதில் இந்தியா உண்மையில் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது' என்று கூறினார்.

அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், பலதரப்பட்ட மக்கள் வாழும் நிலையில், லாக்டவுன் என்பது சவாலான ஒரு விஷயம் என்று கூறிய அவர். இந்தியா அதைஅ சிறப்புடன் கையாண்டது என குறீப்பிட்டார்.

ALSO READ | Budget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News