வெயிடிங் லிஸ்டில் இருக்கும் டிரெயின் டிக்கெட்டை கன்பார்ம் செய்ய சூப்பர் ஐடியா..!

Train Ticket Booking | நீங்கள் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து காத்திருக்கிறீர்கள் என்றால் அதனை உறுதி செய்ய சூப்பரான ஐடியா உள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 22, 2024, 05:09 PM IST
  • ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகணுமா?
  • இந்த ரூல்ஸ் எல்லாம் தெரிஞ்சுக்கோங்க
  • இனி ரயில் டிக்கெட் சீக்கிரம் கன்பார்ம் ஆகும்
வெயிடிங் லிஸ்டில் இருக்கும் டிரெயின் டிக்கெட்டை கன்பார்ம் செய்ய சூப்பர் ஐடியா..! title=

Train Ticket Reservation Tips | ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆக வேண்டும் என்றால் பயணத்தை ஒரு சில மாதங்களுக்கு முன்பே திட்டமிட வேண்டும். அப்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஈஸியாக டிக்கெட் கிடைத்துவிடும். ஆனால், இப்போது ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான காலம் வெறும் 60 நாட்களாக குறைக்கப்பட்டுவிட்டது. அதனால், எல்லோருக்கும் ரயில் டிக்கெட் கன்பார்ம் கிடைக்கும் என சொல்ல முடியாது. பலரும் வெயிட்டிங் லிஸ்டில் டிக்கெட் இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் ரயில் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும்போது அதனை எப்படி உறுதி செய்வது? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

பொதுவாகவே ரயில் டிக்கெட் உறுதியாக கிடைக்கும் என நம்பிக்கையில் பல செயலிகளில் ரயில் டிக்கெட்டை புக் செய்வார்கள். ஏனென்றால் ரயில் டிக்கெட் புக் செய்வதற்கு என ஏராளமான டிக்கெட் முன்பதிவு செயலிகள் இருக்கின்றன. அந்த செயலிகள் எல்லாமே இந்த செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் வெயிட்டிங் லிஸ்ட் இல்லாமல், சீக்கிரம் ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகும் என விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், இந்த விளம்பரத்தை நம்பி முன்பதிவு செய்யும்போது, எல்லா நேரங்களிலும் ரயில் டிக்கெட் கன்பார்ம் கிடைப்பதில்லை. 

எனவே, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருக்கும் பயணிகள் கடைசி நேரத்தில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். நீங்களும் இந்த சிக்கலை எதிர்கொள்பவர்களில் ஒருவர் என்றால் கன்பார்ம் ரயில் டிக்கெட் கிடைப்பதற்கான புதிய தந்திரம் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். ரயில் டிக்கெட் கன்பார்ம் செய்வது எப்படி என்பதற்காக இந்திய ரயில்வே சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்கள் காத்திருப்பு ரயில் டிக்கெட்டை உறுதி செய்வதற்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.  

மேலும் படிக்க | Indian Railways | ரயில் டிக்கெட் புக்கிங் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த 5 புதிய விதிமுறைகள்

சராசரியாக, 21% பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்கிறார்கள். அதனால், ஏற்கனவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகள், ரயில் டிக்கெட் ரத்து செய்யப்படும்போது அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளைப் பெறலாம். அதே நேரத்தில், சுமார் 4-5% பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகும் ரயிலில் பயணம் செய்வதில்லை. காத்திருப்புப் பட்டியல் பயணிகள் இந்த இருக்கைகளையும் பெறலாம். இது தவிர, ரயில்வே அவசரகால ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது, அதன் கீழ் சில இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு முழுமையாக பயன்படுத்தப்படாவிட்டால், காத்திருப்போர் பட்டியல் பயணிகளுக்கும் இந்த இருக்கைகளை வழங்க முடியும்.

ஒரு ஸ்லீப்பர் கோச்சில் 72 இருக்கைகள் உள்ளன, அதில் சராசரியாக 21% பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்கிறார்கள் மற்றும் 4-5% பேர் பயணிப்பதில்லை என்பதையும் சேர்த்தால், 25 விழுக்காடு டிக்கெட்டுகள் காலியாக இருக்கும். அதாவது ஒரு பெட்டியில் 18 இருக்கைகள் காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு ரயிலில் 10 ஸ்லீப்பர் பெட்டிகள் இருந்தால், காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு தோராயமாக 180 இருக்கைகள் (10 பெட்டிகள் x 18 இருக்கைகள்/கோச்) ஒதுக்கப்படும். மூன்றாம் ஏசி, இரண்டாவது ஏசி மற்றும் முதல் ஏசி பெட்டிகளுக்கும் இந்த எண் பொருந்தும்.

இதன் காரணமாக, காத்திருப்பு டிக்கெட் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பண்டிகை காலங்களில், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். காத்திருப்பு பட்டியலும் அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், காத்திருப்பு டிக்கெட் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. பிஸியான வழித்தடங்களில், காத்திருப்பு பட்டியல் அதிகமாக இருக்கும், எனவே, டிக்கெட் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இத்தகைய நேரங்களில் அதிர்ஷ்டம் இருந்தால் காத்திருப்புப் பட்டியல் பயணிகளுக்கு மூன்றாவது ஏசி, செகண்ட் ஏசி மற்றும் முதல் ஏசி பெட்டிகளிலும் இருக்கை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

காத்திருப்பு டிக்கெட்டை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை எவ்வாறு அதிகரிப்பது?

நீங்கள் எவ்வளவு சீக்கிரம் உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்கிறீர்களோ, அந்த அளவு காத்திருப்புப் பட்டியல் குறைவாக இருக்கும், மேலும் உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். முடிந்தால், பிஸியான வழிகளுக்குப் பதிலாக குறைவான பிஸியான வழிகளைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பயணத் தேதிகள் பண்டிகை காலம் இல்லாத சமயங்களில் இருந்தால் முன்பதிவு மூலம் ரயில் டிக்கெட் உறுதியாகும். 

மேலும் படிக்க | Indian Railways: ரயில் தாமதமானால்... பயணிகளுக்கு கிடைக்கும் சில சலுகைகளும் வசதிகளும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News