உங்களின் 199 ரூபாய் தினசரி முதலீடு 94 லட்சம் ரூபாயாக மாறும்.. இந்த சக்திவாய்ந்த கொள்கையை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.!
LIC Policy Update: குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நிதி வலிமைக்காக சந்தையில் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இருப்பினும், LIC-யின் திட்டங்கள் பாதுகாப்பானதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகின்றன. அதிலும் LIC ஜீவன் உமாங் (Jeevan Umang) திட்டத்தில் பல நன்மைகள் உள்ளது. LIC ஜீவன் உமாங் திட்டத்தின் விவரங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பாலிசியின் முதிர்வு வயது 100 என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதிர்வு வயது 85 என எடுத்துக் கொண்டால் கூட, பாலிசிதாரருக்கு 85 வயது வரை பென்ஷன் கிடைக்கும். ஒரு ஆண்டு பென்ஷன் ரூ.1,00,000 வீதம், 48 ஆண்டுகளுக்கு என மொத்தம் ரூ. 48,00,000 கிடைக்கும் . விபத்தினால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ரூ.25 லட்சம் மற்றும் 3 வகையான போனஸ் கிடைக்கும்.
LIC-யின் 63 வருட அனுபவத்தில், LIC ஜீவன் உமாங்
சில தவிர்க்க முடியாத, நல்ல காரியங்களினால் பிரிமியம் செலுத்துவது தடைபட்டாலும், இந்த பாலிசியின் பிரிமியம் (Premium) செலுத்தும் காலத்தை குறைத்து கொள்ளலாம். உதாரணமாக 10 ஆண்டுகளாக, 5 ஆண்டுகளாக ,குறைந்தது குறைத்துக் கொள்ள முடியும். ஆனால் நாம் செலுத்தியிருக்கும் பிரிமியத்திற்கு ஏற்ப பயன்கள் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | நீங்கள் PhonePe பயனரா?.. அப்போ உங்களுக்கு வெறும்149-க்கு காப்பீடு சலுகை கிடைக்கும்!
குறிப்பாக இந்த திட்டத்தில் ஒருவர் தினமும் 199 ரூபாய் முதலீடு செய்தால் அவர் நிச்சயமாக 94 லட்சம் ரூபாய் பெறமுடியும். இதற்கான வழிவகையும் இந்த திட்டத்தில் உள்ளது என LIC தெரிவித்துள்ளது.
ரூ.199-க்கு ரூ.94 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்
உங்கள் வயது 25 ஆண்டுகளாக இருந்தால் நீங்கள் 15 வருட பிரீமியம் செலுத்தும் கால திட்டத்தை (74 ஆண்டு கால) தேர்வு செய்திருந்தால், இதற்கு நீங்கள் மொத்த பிரீமியம் ரூ .10,93,406 செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில், தினசரி ரூ.199 முதலீடு செய்தால் மொத்தம் ரூ .94,72,500 வருவாய் கிடைக்கும். 15 வருடங்களுக்கு பிரீமியம் செலுத்திய பிறகு, 40 வயதிலிருந்து, இந்த தொகையில் 8 சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும், இது ஆண்டுக்கு ரூ .72,000 ஆகும்.
இந்த முறையில் ஆன்லைனில் சரிபார்க்கவும்
பாலிசி நிலையை அறிய, LIC வலைத்தளமான https://www.licindia.in/ -யை பார்வையிடவும். இதற்காக, நீங்கள் முதலில் உங்கள் பதிவை செய்ய வேண்டும். பதிவு செய்ய https://ebiz.licindia.in/D2CPM/#Register என்ற இணைய இணைப்புக்குச் செல்லவும். இதற்கு பிறகு உங்கள் பெயர், பாலிசி எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிடவும். இதற்குப் பிறகு, நீங்கள் பதிவுசெய்ததும், உங்கள் LIC கணக்கைத் திறந்து நிலையை சரிபார்க்கலாம்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR