கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில், தொழில் துறையில் மந்த நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, மக்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதியதால், அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர், அதனால், தங்கத்தின் விலை அதிகரித்து பெரும் உச்சத்தை அடைந்தது.
அண்மைக்காலமாக தங்கம் விலையில் (Gold Rate) ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, நேற்று சிறிது குறைந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக வெளிவந்துள்ளது.
இன்று, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 12 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,958 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் விலை 96 ரூபாய் குறைந்து, 39,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஒரு கிராம் வெள்ளி 76.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 76100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனாலும், தற்போதைய நிலவரப்படி தங்கத்தின் விலை இன்னும் சற்று அதிகரிக்கும் வாய்ப்பு தான் அதிகம் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், முதல் முறையாக கொரோனா பரவல் (Corona Virus) தாக்கத்தின் போது உலகளவில் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டே போனது. மேலும் விலை ஏற்றம் நிரந்திரம் என எண்ணி மக்கள் பீதியில் தங்கத்தை மக்கள் அதிக அளவில் வாங்கினர். அதனால், லை கட்டுக்கடங்காமல், போனது. ஆனால், நிலைமை சீராக தொடங்கியதும், யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை மெது மதுவாக குறைய ஆரம்பித்தது.
அதனால் தற்போதும், அவசரம் காட்டாமல் இருந்தால் தானாகவே தங்கம் விலை குறைந்து விடும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். அதனால் பொறுத்திருந்து தங்கம் வாங்குவது புத்திசாலித்தனம்
ALSO READ | Petrol, Diesel Price (May 28): இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR