PPF Account Withdrawal: நீண்ட கால முதலீட்டிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி விளங்குகிறது. பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்யும் பணத்திற்கு நல்ல வட்டி விகிதம் கிடைப்பதுடன், வரி விலக்கும் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் முதிர்வு காலம் முடிவதற்குள் கணக்கை நீங்கள் மூடிக்கொள்ளும் வசதியும் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இதுபோன்ற பல சிறப்பான அம்சங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதாலேயே பலரும் நீண்ட கால முதலீட்டிற்கு பொது வருங்கால வைப்பு நிதியை தேர்வு செய்கின்றனர். பொது வருங்கால வைப்பு நிதியின் முதிர்வு காலம் மொத்தம் 15 ஆண்டுகள் ஆகும், இந்த திட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய திட்டத்தின் முதிர்ச்சிக்கு முன்னரே அதாவது பணத்தை பாதியில் திரும்பப் பெற முடியாது என்று பலரும் தவறாக நினைத்து வருகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான கருத்து ஆகும், உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் எப்போது வேண்டுமானாலும், நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை மூடி கொள்ள முடியும்.
மேலும் படிக்க | அம்ரித கலசம் திட்டத்தை மீண்டும் தொடங்கிய SBI; வாய்ப்பை தவற விடாதீர்கள்!
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் முதலீட்டாளர் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பிபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம். இது தவிர, கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி செல்வுகளுக்காக பிபிஎஃப் கணக்கிலிருந்து முழுப் பணத்தையும் எடுத்து கொள்ள முடியும். அதுவே பிபிஎஃப்-ல் கணக்கு வைத்திருப்பவர் வெளிநாட்டு இந்தியராக (என்ஆர்ஐ) மாறினாலும், அவர் தனது பொது வருங்கால கணக்கை மூடலாம். பிபிஎஃப் கணக்கை மூடுவதற்கு சில விதிமுறைகள் உள்ளது, பிபிஎஃப் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர் எவராக இருந்தாலும், அவர் கணக்கை தொடங்கிய 5 வருடங்கள் முடிந்த பிறகுதான் அந்த கணக்கை மூட முடியும். அதேசமயம் கணக்கை முதிர்வு காலத்திற்கு முன் முதலீட்டாளர் மூடினால், கணக்கைத் திறந்த தேதியிலிருந்து மூடும் தேதி வரை அவர்களுக்கு 1% வரை வட்டி கழிக்கப்படும். பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் தற்போது ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 மற்றும் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை பிபிஎஃப்-ல் டெபாசிட் செய்து கொள்ளலாம். மேலும் ஒரு நபர் தனது சொந்த பெயரில் ஒரு பிபிஎஃப் கணக்கை மட்டுமே திறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது வருங்கால வைப்பு நிதி கணக்கின் முதிர்வுக்கு முன்னர் கணக்கு வைத்திருக்கும் கணக்குதாரர் இறந்துவிட்டால், கணக்கை திறந்து ஐந்து ஆண்டுகள் கழித்து தான் கணக்கை மூட வேண்டும் என்கிற இந்த ஐந்தாண்டு நிபந்தனை கணக்குதாரரின் நாமினிக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இறந்தவரின் கணக்கிலிருந்து நாமினி ஐந்து ஆண்டுகளுக்கு முன் பணத்தை எடுத்துக்கொள்ளலாம், கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு அந்த கணக்கு மூடப்படும் மற்றும் இறந்தவரின் கணக்கிலுள்ள பணத்தை எடுத்துக்கொள்ளலாமே தவிர அந்த கணக்கை தொடர நாமினிக்கு உரிமை இல்லை. பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் முதிர்வு காலத்திற்கு முன் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், அதற்கான உரிய படிவத்தை பூர்த்தி செய்து பிபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் தபால் அலுவலகம் அல்லது வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்துடன் பாஸ்புக்கின் புகைப்பட நகல் மற்றும் அசல் பாஸ்புக் ஆகியவற்றையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். இதில் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டதால் காரணமாக அவரது கணக்கு மூடப்பட்டிருந்தால், அந்தக் கணக்கு மூடப்பட்ட மாதத்தின் இறுதி வரை வட்டி வழங்கப்படும்.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1.20 லட்சம் கிடைக்கும்... முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ