மதுரை, நாகர்கோவில், கோவை செல்லும் கோடை கால சிறப்பு ரயில்கள்! முழு விவரம்

Summer Special Trains in Tamil Nadu: கோடைகால சிறப்பு ரயில்கள் மதுரை, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 21, 2024, 08:20 AM IST
  • தமிழ்நாடு சிறப்பு ரயில்கள் முழு விவரம்
  • கோவை, மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
  • நாகர்கோவில், நெல்லைக்கும் சிறப்பு ரயில் உண்டு
மதுரை, நாகர்கோவில், கோவை செல்லும் கோடை கால சிறப்பு ரயில்கள்! முழு விவரம் title=

கோடை விடுமுறையையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி, மதுரை, நாகர்கோவில், திருச்சி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வழியாக இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ரயில்வே துறை இந்த நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் தேதி, நேரம் மற்றும் நகரங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ஜபல்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்க மேற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஜபல்பூர், மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (02122) ஜபல்பூரில் இருந்து ஏப்ரல் 25, மே 02, 09, 16, 23, 30, ஜூன் 06, 13, 20, 27, ஜூலை 04, 11, 18, 25 ஆகிய வியாழக்கிழமைகளில் மாலை 04.25 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 12.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் மதுரை, ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (02121) மதுரையில் இருந்து ஏப்ரல் 27, மே 04, 11, 18, 25, ஜுன் 01, 08, 15, 22, 29, ஜுலை 06, 13, 20, 27 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 07.40 மணிக்கு ஜபல்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் நயின்பூர், பாலாகாட், கோன்டியா, நக்பிர், பலார்ஷா, விஜயவாடா, கூடூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் படிக்க | ஐஆர்சிடிசியின் 4 சூப்பரான டூர் பேக்கேஜ்கள்! கம்மி விலையில் வெளிநாடு சென்று வரலாம்

இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 குளிர்சாதன மூன்றடுக்கு குறைந்த கட்டண படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதேபோல், சென்னை - நெல்லை இடையே மே 31 வரை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழும்பூரிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு நெல்லையை அடையும். அதேபோல, நெல்லையிலிருந்து சென்னைக்கு மே 30 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. நெல்லையில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30-க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், ஈரோடு வழியாக, விசாகப்பட்டினம்- கொல்லம் இடையே விசாகப்பட்டினம்- கொல்லம் வாராந்திர சிறப்பு ரயிலானது (எண்.08539) இயக்கப்படுகிறது. ஜூலை 4 ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் துவ்வாடா, சாமல்கோட், ராஜமுந்திரி, ஏளூரு, விஜயவாடா, தெனாலி, ஓங்கோல், நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், செங்கணாச்சேரி, திருவல்லா, செங்கண்ணூர், மாவேலிக்கரை, காயங்குளம் வழியாக இயக்கப்படவுள்ளன. இதேபோல் மறுமார்க்கத்திலும் கொல்லம் - விசாகப்பட்டனம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கோடை காலத்தையொட்டி சென்னையிலிருந்து திருச்சி - மதுரை வழியில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகவுள்ளது. சென்னை-நாகர்கோவில் சிறப்பு வந்தே பாரத் சேவை ரயில் எண் 06057, சென்னை எழும்பூரில் இருந்து காலை 5:15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். மறு பயணத்தில், ரயில் எண் 06058 நாகர்கோவிலில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். ஏப்ரல் 26, 27, 28 ஆகிய தேதிகளில் கோடை சிறப்பு வந்தே பாரத் ரயிலாக இயக்கப்படவுள்ளது. 

மேலும் படிக்க | முகேஷ் அம்பானி போல டாப் பணக்காரர் ஆவது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News