JLR-ல் இருந்து தனது பங்குகளை விலக்கிக் கொள்ள Tata முடிவு...

டாடா குழுமம் விரைவில் சொகுசு கார் நிறுவனமான ஜாகுவார்-லேண்ட் ரோவர் (JLR)-ல் இருந்து தனது பங்குகளை விலக்கிக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Last Updated : Nov 13, 2019, 11:03 AM IST
JLR-ல் இருந்து தனது பங்குகளை விலக்கிக் கொள்ள Tata முடிவு... title=

டாடா குழுமம் விரைவில் சொகுசு கார் நிறுவனமான ஜாகுவார்-லேண்ட் ரோவர் (JLR)-ல் இருந்து தனது பங்குகளை விலக்கிக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஜெர்மனிய கார் தயாரிப்பு நிறுவனமான BMW மற்றும் சீன நிறுவனமான Geely-யுடன் தனது பங்குகளை விற்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது எனவும் கூறப்படுகிறது. டாடா குழுமம் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் (JLR) ஆகியவற்றில் இழப்புகளை சந்தித்து வரும் நிலையில் இந்த அதிரடி முடிவு எடுத்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி டாடா குழு இந்த இரண்டு நிறுவனங்களின் செலவுகளையும் குறைக்க விரும்புகிறது. மேலும், மின்சார வாகனங்கள் மீது அதிக முதலீடு செய்வதால் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டங்களில் மட்டுமே இருப்பதாகவும், இது குறித்து உறுதியான முடிவு எடுக்க நேரம் பிடிக்கும் எனவும் கூறப்படுகிறது. 

இதனிடையே, டாடா அல்லது JLR உடன் இது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நிகழவில்லை என Geely நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களுடனும் செயல்படுவதால் டாடா குழுமத்திற்கு ரூ.2789 லட்சம் கோடி (390 மில்லியன் டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் கொண்டிருந்தார் JLR பயனடைய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

BMW உடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இருந்தால், நிறுவனம் இயந்திரங்களை உருவாக்குவதற்கும் மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கும் எளிதாக இருக்கும். ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 395 மில்லியன் டாலர்களை (ரூ. 34 பில்லியன்) இழந்துள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவரின் நிறுவனம் செலவினங்களைக் குறைக்க உலகளவில் 4500 ஊழியர்களுக்கு வெளியேறும் வழியைக் காட்டியுள்ளது. 

நிறுவனம் இந்த ஆண்டு சுமார் 2.5 பில்லியன் டாலர் ஜாகுவார் லேண்ட் ரோவரில் முதலீடு செய்தது. இந்த பெரிய இழப்பு இந்த நிதியாண்டில் அதன் வருவாயை பாதிக்கும் என்றும் அது தீங்கு விளைவிக்கும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸுக்குச் சொந்தமான இந்நிறுவனம், இங்கிலாந்தில் 40,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News