கோவிலில் இனி 50000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!

வைஷ்ணவி தேவி கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் வரை மட்டுமே அனுமதி

Last Updated : Nov 13, 2017, 07:49 PM IST
கோவிலில் இனி 50000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி! title=

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்முவின் காத்ராவில் உள்ள சிறப்புபெற்ற இக்கோயிலுக்கு வெளிநாட்டினர் உள்பட  ஏராளமானோர் வருகை தருகின்றனர். 

அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிவதால் மலைப்பகுதியில் மாசு ஏற்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முன்னதாக முறையிடப்பட்டது. 

இதை விசாரித்த தீர்ப்பாயம், தினசரி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்த திட்டமிட்டது. அதன்படி தினமும் 50,000 பக்தர்கள் வரை மட்டுமே கோயிலுக்கு வர அனுமதிக்க வேண்டும் எனவும், குப்பைகளை வீசிச் செல்வோருக்கு ரூபாய் 2000 அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Trending News