திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் டிசம்பர் மாதத்தில் அங்கபிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று காலை காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
பத்ரிநாத் கோயில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகள், கதவுகள் மற்றும் புராதனப் பொருட்கள் திருடு போனதாக வழக்கு தொடுக்க கோரிய மனுவின் மீது வரும் மார்ச் 2-க்குள் காவல்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் விபத்துகளைத் தடுக்க முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தால் ஆயிரங்கால் மண்டபத்துக்கு பாதிப்பில்லை எந்த வித பாதிப்பும் இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
குக்கே சுப்ரமணியசுவாமி கோயில் கர்நாடக மாநிலத்தின், மங்களூர் அருகே உள்ள தட்சின கர்நாடக மாவட்டத்தில், சுல்லியா வட்டத்தில், குக்கே சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில், சேஷமலை அமைந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் முக்கிய அர்ச்சகராக திருச்சூர் பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மாளிகப்புறம் முக்கிய அர்ச்சகராக அனீஸ் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலையில் இன்று காலை புதிய மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது. இதில் சபரிமலை மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, மாளிகைபுரம் மேல்சாந்தியாக அன்னீஸ் நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் திருச்சூர் பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஒரு ஆண்டு காலத்துக்கு சபரிமலையில் தங்கி பூஜை செய்வார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன.
கார்த்திகை மாதம் பிறந்துள்ளதை முன்னிட்டு இன்று கோவில்களில் ஐயப்ப பக்தர்கள் சரணகோஷம் முழங்கினர். இன்று ஐயப்பன், முருகன் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கார்த்திகை தொடங்கி தை மாதம் வரை கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலையில் மண்டல பூஜைகள் நடைபெறும். கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம் ஆகும்.
கரூர் கோயிலில் தரிசனம் செய்தபோது, 2 பெண்களின் கூந்தல் அறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி எதிரே ஊரணி காளியம்மன் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய் மற்றும் விஷேச நாட்களில் இக்கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் 2 மணியளவில்,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.