மாதாவின் பிறந்த நாள் இன்று. உலகை காக்கும் அன்னை, எல்லா மதத்தினரும் வழிப்படும்நாள், அனைவரும் அன்னையை துதிக்கும் நாள்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலப் பேராலயம், பண்பாட்டினாலும் ,மொழியினாலும் சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும் புண்ணியத் தலமாகத் திகழ்ந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம்,கொங்குனி, இந்தி, என்று சிறப்பாக திருப்பலி நடைபெறும்.
புனித ஆரோக்கிய மாதாவின் தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை வலம் வரும் பொது அனைத்து மக்களையும் ஆசிர் வாதம் வழங்கிய படியே கோவிலில் தேர்பாவணி இரக்கப்படும்.
தேர் மக்கள் வெள்ளத்தில் மெதுமெதுவாக வலம் வரும் அழகு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்றும் இன்று மாலை அன்னையின் திருக்கொடியை இரக்கி விடுவார்கள் திருவிழா இனிதே முடிவடையும்.
மதநல்லிணக்கத்துக்கான ஈடு இணையற்ற சான்றாக நின்று மிளிர்கிறது ஆரோக்கிய மாதா பேராலயம். அன்னையின் பிறந்தநாளை இன்று நாம் அனைவரும் கொண்டாடுவோம். அன்னையின் ஆசீர்வாதம் பெருவோம்
இன்று மாதாவின் பிறந்த நாளை யொட்டி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. சென்னை பெசன்ட்நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.