வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு தவறுதலாக டயாலிசிஸ் சிகிச்சை அளித்த சம்பவம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்துள்ளது.
பீஹாரை சேர்ந்தவர் ரேகா தேவி, இவர் தன் சொந்த ஊரில் அடிவயிறு பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதில் ஏதோ சிக்கல் ஏற்படவே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்துள்ளார்,
அங்கு அவருக்கு சீனியார் மருத்துவ பேராசிரியர் தலைமையிலான குழுவினர் வயிற்று வலிக்கு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பிறகு வயிற்று வலி குணாமாகவில்லை. மீண்டும் இது தொடர்பாக பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணிற்கு சிறுநீரககோளாறு ஏதும் இல்லை என்பதும், தவறுதலாக டயாலிஸ் சிகிச்சை அளித்தும் தெரியவந்தது.
தவறான சிகிச்சை அளித்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் மருத்துவமனை டீன் ஓய்.கே. குப்தா உத்தரவிட்டார்.
விசாரணையில் முன்னதாக பீகாரில் ஷாகாஸ்ரா ஊரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட ரேகாவின் மருத்துவ அறிக்கை தொடர்பான ஆவணங்கள் மாறிவிட்டதே தவறான சிகிச்சைக்கு காரணம் என கூறப்படுகிறது.
தவறான சிகிச்சை அளித்தது மட்டுமல்லாமல் அதற்கான ஆவணங்களிலும் முறைகேடுகள் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தவறான சிகிச்சை அளித்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் மருத்துவமனை டீன் டாக்டர் ஓய்.கே. குப்தா உத்தரவிட்டார். முன்னதாக பீஹாரில் ஷகாஸ்ரா ஊரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட ரேகாவின் மருத்துவ அறிக்கை தொடர்பான ஆவணங்கள் மாறிவிட்டதே தவறான சிகிச்சைக்கு காரணம் என கூறப்படுகிறது.