Budget 2021: மாணவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? கல்விக் கடன் விகிதம் குறையுமா?

இந்தியாவில், கார் கடன்கள் நிமிடங்களில் கிடைத்து விடுகின்றன, ஆனால், கல்வி கடன்களுக்கு பல முறை அலைய வேண்டியுள்ளது என்று மாணவர்கள் கருதுகிறார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2021, 04:02 PM IST
  • கல்வி கடன் விதிகளை எளிதாக்க வேண்டும் என்று நிதியமைச்சரிடம் கோரிக்கை உள்ளது.
  • கல்வித்துறைக்கான பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டும் என மாணவர்கள் கருதுகிறார்கள்.
  • Startup-களுக்கு சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட வேண்டும் என மாணவர்கள் விரும்புகின்றனர்.
Budget 2021: மாணவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? கல்விக் கடன் விகிதம் குறையுமா? title=

Union Budget 2021: மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த முறை பட்ஜெட் டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தப்படும். பிப்ரவரி 1 ம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.

சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பட்ஜெட் குறித்து சில எதிர்பார்ப்புகள் உள்ளன. தொழிலதிபர் முதல் சாதாரண மனிதர் வரை, வீட்டுப் பெண்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரும் நிதி அமைச்சரிடமிருந்து தங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

நாட்டின் இளைஞர்களும் பட்ஜெட்டில் (Budget) மிகுந்த நம்பிக்கைக் கொண்டுள்ளார்கள். மாணவர்களும் பல விஷயங்களில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள். மாணவர்கள் பட்ஜெட்டில் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிய ஜீ மீடியா சில மாணவர்களிடம் அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தது.

கல்விக் கடன் இன்னும் எளிதாக்கப்பட வேண்டும்

கல்விக் கடன் (Education Loan) பெறுவது மிகவும் கடினமாக உள்ளது என்று மாணவர்கள் கூறுகிறார்கள். எனவே, கல்வி கடன் விதிகளை எளிதாக்க வேண்டும் என்று நிதியமைச்சரிடம் கோரிக்கை உள்ளது. மேலும், கல்விக் கடனுக்கான வட்டி வீதத்தையும் குறைக்க வேண்டும் என மாணவர்கள் விரும்புகிறார்கள்.

இந்தியாவில், கார் கடன்கள் நிமிடங்களில் கிடைத்து விடுகின்றன, ஆனால், கல்வி கடன்களுக்கு பல முறை அலைய வேண்டியுள்ளது என்று ஒரு மாணவர் கூறினார்.

ALSO READ: Budget 2021: Mobile Phone வாங்கப்போறீங்களா? விலை ஏறுமா இறங்குமா?

வரி விலக்கு கிடைக்கவேண்டும்

கொரோனா தொற்றுநோயால், பலரது வேலைகள் பறிபோய்விட்டன. இப்போது அனைத்து வேலை வாய்ப்புகளிலும், சம்பளம் மிகக் குறைவாக உள்ளது, மறுபுறம் வரிச்சுமையும் உள்ளது. பொது மக்கள் நிவாரணம் பெற அரசாங்கம் அனைத்திலும் வரிகளை குறைக்க வேண்டும் என்று மாணவர்கள் கருதுகிறார்கள்.

Startup-களுக்கான சிறப்பு தொகுப்புகள்

Startup-களுக்கு சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட வேண்டும் என மாணவர்கள் விரும்புகின்றனர். ஸ்டார்ட்அப்களால் முதலீட்டாளர்களை எளிதில் பெற முடிவதில்லை. அப்படியே கிடைத்தாலும், அவர்களின் வட்டி விகிதம் மிக அதிகமாக உள்ளது. எந்தவொரு நிறுவனத்தையும் தொடங்க பல வருடங்கள் பொருளாதார ரீதியாக பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆகையால் ஸ்டார்டப்களுக்கு விசேஷ தொகுப்பு அளிக்கப்பட வேண்டும் என மாணவர்கள் கருதுகின்றனர்.

கல்வித்துறைக்கான பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டும்

அரசாங்கத்தின் கவனம் கல்வித்துறையில் அதிகரித்துள்ளது. அரசாங்கம் புதிய கல்விக் கொள்கைகளை அறிவித்துள்ளது. மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கல்வி அமைச்சகம் என மறுபெயரிடப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றுநோய் கல்வித் துறையின் தேவைகளை பெரிதும் அதிகரித்துள்ளது. எனவே, கல்வித்துறைக்கான பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டும் என மாணவர்கள் கருதுகிறார்கள்.

வைஃபை வசதிகள் அனைத்து கிராமங்களையும் சென்றடைய வேண்டும்

கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்வி பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால் ஆன்லைன் கல்வியில் இணைய வசதி மிகப்பெரிய தடையாக இருக்கிறது. கிராமங்களில் இணைய அணுகல் இன்னும் அதிகம் இல்லை. இத்தகைய சூழ்நிலையில், வைஃபை (Wi-Fi) மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பட்ஜெட்டில் தொலைத் தொடர்புத் துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம் இதைச் சமாளிக்க முடியும். இது ஆன்லைன் கல்வியை பலப்படுத்தும். இதைப் பற்றிய கோரிக்கையையும் மாணவர்கள் விடுத்துள்ளனர். 

ALSO READ: Budget 2021: Good news, Rs.6000 ஆக இருந்த PM Kisan நிதி Rs.10,000 ஆக உயரக்கூடும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News