CBSE Date Sheet 2023: சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அப்டேட்

CBSE Exams Dates 2023: 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் தேர்வு நடைபெறும் தேதிகள் தொடர்பான தகவல் விரைவில் வெளியிடப்படும், தேதித்தாள், அனுமதிச்சீட்டு பற்றிய முக்கிய தகவல்களை சிபிஎஸ்இ இன்று வெளியிடவுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 10, 2022, 06:24 AM IST
  • சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான தகவல்
  • நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ தேர்வு நடைபெறும் தேதிகள்
  • ஒரே பருவத்தில் தேர்வு நடைபெறும்
CBSE Date Sheet 2023: சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அப்டேட் title=

CBSE Exams Dates 2023: 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் தேர்வு நடைபெறும் தேதிகள் தொடர்பான தகவல் விரைவில் வெளியிடப்படும், தேதித்தாள், அனுமதிச்சீட்டு பற்றிய முக்கிய தகவல்களை சிபிஎஸ்இ இன்று வெளியிடவுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் CBSE, 10, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு நடைபெறும் நாட்கள் தொடர்பான அட்டவணையை டிசம்பர் 14ம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான CBSE தேதித்தாள் CBSE இணையதளத்தில் ஆன்லைனில் கிடைக்கும். மாணவர்கள் முறையே cbse.gov.in மற்றும் cbse.nic.in வழியாக 2023 ஆம் ஆண்டிற்கான CBSE 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு கால அட்டவணையைப் பார்க்கலாம்.

2022-2023 ஆம் கல்வியாண்டில் CBSE 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை வாரியம் ஒரே பருவத்தில் நடத்தும். 2023 சிபிஎஸ்இ போர்டு தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஒரே கட்டமாக நடைபெறும். 2022-23 அமர்வுக்கான CBSE தேதி தாளில், தேர்வு நடைபெறும் பாடங்கள், தேர்வு தேதிகள் 2023, தேர்வு காலங்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான முக்கியமான வழிமுறைகள் ஆகியவை அடங்கும்.

பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பள்ளிகளின் மூலமே விண்ணப்பிக்கலாம் என்றும்,  ஆனால், தனியாக படித்து, பள்ளிக்கு செல்லாமல் பத்து மற்றும் பணிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்காக தனி அறிவிக்கையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனி அறிவிக்கையை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. 

மேலும் படிக்க | அடுத்த ஆண்டு பூமிக்கு வேற்றுகிரகவாசிகள் விசிட் அடிப்பார்கள்... அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்!

2022–2023 இல் சிபிஎஸ்இ போர்டு தேர்வுகளை எழுதும் மாணவர்கள், கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து CBSE தேதித்தாள் 2023ஐ பதிவிறக்கம் செய்யலாம். 34 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் CBSE 10 ஆம் வகுப்பு மற்றும் 12 போர்டு தேர்வுகளை எழுத பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் சுமார் 18 லட்சம் மாணாக்கர்கள் 10 ஆம் வகுப்பிலும், 16 லட்சம் பேர் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளையும் எழுத உள்ளனர்.

இந்த தேர்வுகளுக்கான தற்காலிக நடைமுறைகள் மற்றும் அட்டவணைகளை வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. குளிர்கால அட்டவணையுடன் கூடிய பள்ளிகளுக்கான நடைமுறை தேர்வுகள், இணைக்கப்பட்ட பள்ளிகள், கடந்த ஜூலை மாதத்திலேயே LOC அல்லது மாணாக்கர்களின் பட்டியலை இறுதி செய்து வாரியத்திடம் சமர்ப்பித்தன.

CBSE வாரியத் தேர்வுகள் 2023 ஒருமுறை மட்டுமே நடத்தப்படும், கோவிட்19 காரணமாக கடந்த ஆண்டைப் போல இரண்டு முறை நடைபெறாது. சிபிஎஸ்இ பரீக்ஷா சங்கம் போர்டல் மூலம் பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ தேதித்தாள் வழங்கப்படும்.

மேலும் படிக்க | ஆயுதங்கள் பயன்படுத்தப்படாத நிலையில் ஜல்லிக்கட்டு எப்படி ஆபத்தாகும் ? உச்சநீதிமன்றம் கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News