JEE Main 2020 Results Announced: எப்படி தெரிந்து கொள்வது? முழு விவரம் இங்கே!!

தேசியத் தேர்வு முகமை (NTA) தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeemain.nta.nic.in -ல் JEE Main- க்கான முடிவுகளை அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2020, 12:23 AM IST
  • COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் JEE Main 2020 தேர்வில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
  • தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் மற்றும் இன்விஜிலேட்டர்களுக்கு கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிடப்பட்டன.
  • செவ்வாயன்று, NTA தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் JEE Main-ன் Answer Key-ஐ வெளியிட்டது.
JEE Main 2020 Results Announced: எப்படி தெரிந்து கொள்வது? முழு விவரம் இங்கே!! title=

JEE Mains 2020 முடிவுகள் அறிவிக்கப்பட்டன:

தேசியத் தேர்வு முகமை (NTA) தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeemain.nta.nic.in -ல் JEE Mains 2020- க்கான முடிவுகளை அறிவித்துள்ளது. JEE Mains 2020 தேர்வுகளை எழுதியவர்கள் அனைவரும் மேற்கூறிய வலைத்தளத்திற்குச் சென்று தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

அதிக மாணவர்கள் இந்த வலைத்தளத்தில் தங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்க முற்படும்போது ஏற்படும் இணைய நெரிசல் காரணமாக சில சமயம் வலைத்தளம் செயலிழக்கக்கூடும். அப்படி நடந்தால், மாணவர்கள் சிறிது நேரம் காத்திருந்து பின்னர் அவர்களின் JEE Mains 2020 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

JEE Mains 2020 Result-ஐ எவ்வாறு தெரிந்து கொண்டு பதிவிறக்குவது:

Step 1- அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்— jeemain.nta.nic.in.

Step 2- ‘JEE Mains 2020 results’-ல் கிளிக் செய்யவும்.

Step 3- காட்சி திரையில் ஒரு புதிய window தோன்றும்.

Step 4- உங்கள் சான்றுகளை உள்ளிட்டு உள்நுழையவும்.

Step 5- உங்கள் JEE Mains 2020 முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும்.

Step 6- JEE Mains 2020 முடிவுகளை பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புகளுக்காக பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்.

தொலைபேசியில் JEE Mains 2020 முடிவுகளை சரிபார்க்க இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:

Step 1- உங்கள் மொபைல் தொலைபேசியில் Google குரோம் அல்லது எதாவது பிரௌசரை திறக்கவும்.

Step 2- அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeemain.nta.nic.in க்குச் செல்லவும்

Step 3- ‘JEE Main April / September’ Result20- ஐக் கிளிக் செய்யவும்.

Step 4- புதிய பக்கம் திறக்கும்

Step 5- உங்கள் உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும்.

Step 6- உங்கள் JEE Main ஸ்கோர்கார்டு உங்கள் மொபைல் திரையில் தோன்றும்.

செவ்வாயன்று, NTA தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான nta.ac.in மற்றும் jeemain.nta.nic.in இல் JEE Main-ன் Answer Key-ஐ வெளியிட்டது.

ALSO READ: MBBS மாணவர்களுக்கு ரயில்வே பெரிய நிவாரணம் அளித்தது, இனி நோ டென்ஷன்

COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் JEE Main 2020 தேர்வில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். சில மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்வை ஒத்திவைக்கக் கோரி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. அதற்கு பதிலாக தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் மற்றும் இன்விஜிலேட்டர்களுக்கு கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டு நுழைவுத் தேர்வுகளை நடத்தியது.

JEE Advanced 2020 / ITT JEE பதிவு செயல்முறை செப்டம்பர் 12 ஆம் தேதி அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeeadv.ac.in இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. JEE Advanced 2020 தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ALSO READ: JEE Advanced 2020: தேர்வுத் தேதியில் மாற்றம், முழு விவரம் உள்ளே!!

Trending News