DMK எப்படி நமக்கு எதிரியோ, அதே போல் ADMK நமக்கு துரோகி: TTV

அதிமுகவினருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது; அதிமுகவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்கக்கூடாது என அமமுக நிவாகிகளுக்கு டிடிவி தினகரன் உத்தரவு!

Updated: Aug 4, 2019, 03:39 PM IST
DMK எப்படி நமக்கு எதிரியோ, அதே போல் ADMK நமக்கு துரோகி: TTV

அதிமுகவினருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது; அதிமுகவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்கக்கூடாது என அமமுக நிவாகிகளுக்கு டிடிவி தினகரன் உத்தரவு!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து  அமமுக உறுப்பினர்கள் பலர் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். இதேபோல் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் திமுகவிலும் இணைந்துள்ளனர். இந்நிலையில், அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியினை வளர்ப்பதற்கு பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

இதை தொடர்ந்து, அமமுகவில் மற்ற கட்சியினர் இணையும் விழா டிடிவி தினகரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில ஆயிரக்கணக்கான மாற்றுகட்சியினர் அமமுகவில் இணைந்தனர். இந்நிலையில், டிடிவி தினகரன் அமமுக நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில், அமமுகவினர் அதிமுகவினருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்கக்கூடாது என்றும் டிடிவி தினகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார். திமுக எப்படி நமக்கு எதிரியோ அதுபோல் அதிமுக நமக்கு துரோகி என டிடிவி தினகரன் கட்சியனருக்கு கூறியுள்ளார். 

மேலும், அவர் கூறுகையில்; அம்மாவுடன் 30 வருடம் அரசியலில் பயணித்தவன் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் சிலர் மீது குறைகள் இருப்பினும் அதை ஊடுருவி அது சரியா என்பதை என்னால் ஆராய முடியும். தமிழக மக்கள் விரும்பாத, புறக்கணிக்கப்பட்ட ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கட்சியைப் பதிவு செய்தபின் சின்னம் பெற்று அனைத்து தேர்தல்களையும் சந்திப்போம். எதிர்காலத்தில் எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறுவது உறுதி என அவர் தெரிவித்தார்.