எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - TTV தினகரன்!!

பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? என டிடிவி தினகரன் கேள்வி!!

Last Updated : May 26, 2019, 11:30 AM IST
எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - TTV தினகரன்!!

பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? என டிடிவி தினகரன் கேள்வி!!

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக, தாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது அதிமுக, வேலூரை தவிர்த்து தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. கூட்டணி கட்சியுடன் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட 21 தொகுதிகளில் அதிமுக வெறும் 18.48% வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. திமுக தங்களின் ஆட்சியை பிடித்துள்ளது. 

இந்நிலையில், சென்னை அடையாறில் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்; பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் வெற்றியை எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம். சுமார் 300 வாக்குச்சாவடிகளில் அ.ம.மு.க.விற்கு பூஜ்ஜிய வாக்குகளே பதிவாகி உள்ளன. இதற்கு தேர்தல் ஆணையம் தான் பதில்கூற வேண்டும். அ.ம.மு.க. முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே, அவர்களின் வாக்குகள் எங்கே போனது..?

மேலும், பல வாக்குச்சாவடிகளில் அ.ம.மு.க.வுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? 10 பேர் அ.ம.மு.க.வை விட்டுச் செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேர்தலுக்கு தேர்தல் மக்களின் மனநிலை மாறும். எனவே பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் தோல்வி குறித்து ஆராய வேண்டிய அவசியம் இல்லை, எதிர்காலத்தில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

 

More Stories

Trending News