கர்நாடக சட்டமன்றத்தின் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 5-ஆம் நாள் நடைப்பெறும் என கர்நாடகாவின் தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 9-ஆம் நாள் எண்ணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் நாளை (நவம்பர் 11) முதல் மாநிலத்தில் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்ட 15 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sanjeev Kumar, Chief Electoral Officer of Karnataka: Voting to take place on 5 December & counting of votes on 9 December for by-elections to 15 Karnataka Assembly Constituencies. Model Code of Conduct comes into effect from 11 November. pic.twitter.com/xkJY0Os5ws
— ANI (@ANI) November 10, 2019
14 காங்கிரஸ் மற்றும் 3 ஜனதா தளம்-மதச்சார்பற்ற (JDS) கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களைத் தொடர்ந்து கர்நாடகாவில் இடைத்தேர்தல்கள் கட்டாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. .
2018 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் மஸ்கி (தனி), ஆர்.ஆர்.நகர் தொகுதி முடிவுகள் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், குறித்து இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெறவில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இன்னும் தனது தீர்ப்பை வழங்காத நிலையில் இடைத்தேர்தல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக., 14 மாதங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்-ஜே.டி.எஸ் அரசாங்கம் இந்த எம்.எல்.ஏ.க்கள் விலகலால் ஜூலை 23 அன்று பெரும்பான்மையை இழந்தது. இதனையடுத்து இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட முறிவின் விலைவால், காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் ஆகியவை தனித்தனியாக இடைத்தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன.
இந்நிலையில் கடந்த வாரம் "கர்நாடகாவில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான 8 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட பட்டியலுக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் புதுடெல்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். விரைவில் மீதமுள்ள ஏழு இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்களை கட்சி அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்று வேட்பாளர்களின் பெயர்கள்: பீம்மண்ண நாயக் (யெல்லாப்பூர்), பி.எச். பன்னிகோட் (ஹிரேகூர்), கே.பி. கோலிவாட் (ரன்னேபென்னூர்), எம்.அஞ்சனப்பா (சிக்கபல்லாபூர்), எம்.நாராயணசாமி (கே.ஆர்.புரா), எம்.சிவராஜ் (மகாலட்சுமி லேயவுட்), பத்மாவதி சுரேஷ் (ஹோஸ்கோட்) மற்றும் எச்.பி. மஞ்சுநாத் (ஹன்சூர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு : நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் "பாஜக குறைந்தபட்சம் எட்டு இடங்களை வெல்லத் தவறும் பட்சத்தில் பெரும்பான்மையை இழக்கும், இந்த சூழலில் புதிய தேர்தல் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது."