டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளில் இன்று இந்தியாவுக்கு ஏறுமுக நாள். பேட்மிண்டன் போட்டியில் பி.வி சிந்து வெண்கலம் பதக்கம் வென்ற நிலையில், இந்தியாவுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. ஹாக்கி போட்டியில் இந்தியா 41 ஆண்டுகளுக்குப் பிறகு, அரையிறுதிக்கு முன்னேறியது.
டோக்கியோ: ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வரலாறு படைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கியின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
#TokyoOlympics: Indian men's hockey team proceeds to semi-finals after beating Great Britain 3-1 in quarter-finals pic.twitter.com/ftRvVbT2VS
— ANI (@ANI) August 1, 2021
இந்திய ஹாக்கி அணியின் சார்பில் தில்பிரீத் சிங், ஹர்திக் சிங் மற்றும் குர்ஜந்த் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். கிரேட் பிரிட்டனுக்கு எதிரான போட்டியில் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்திய ஹாக்கி அணி வீரர்கள் தங்களின் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய ஹாக்கி அணி 7 வது நிமிடத்திலும், 16 வது மற்றும் 57 வது நிமிடத்தில் கோல் அடித்தது.
இந்திய ஹாக்கி அணி அற்புதங்களைச் செய்தது
சிந்துவின் வெற்றி அனைவருக்கும் மனநிறைவை கொடுத்த நிலையில் அதை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்தியா பலம் காட்டியது, 41 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஹாக்கியில், இந்திய அணி நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் மீண்டும் வரலாற்றைப் படைத்துள்ளது. கிரேட் பிரிட்டனை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
Also Read | Tokyo Olympics: பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து வெண்கலம் வென்றார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR